மேலும்

Tag Archives: துறைமுக நகரத் திட்டம்

துறைமுக நகரத் திட்டம் மீளத் தொடங்கும் – சீன நிறுவனம் நம்பிக்கை

சிறிலங்காவில் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகரத் திட்டம், மீள ஆரம்பிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக, அதன் கட்டுமானப் பணியை மேற்கொண்ட சீனாவின் தொலைத்தொடர்பு கட்டுமான நிறுவனத்தின் உதவித் தலைவர்  சன் சியூ தெரிவித்துள்ளார்.

துறைமுக நகரத் திட்டம் குறித்த அரசின் நிலைப்பாட்டை வெளியிட ஜூன் 15 வரை காலஅவகாசம்

கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் தொடர்பான, சிறிலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாட்டை, வெளிப்படுத்துவதற்கு காலஅவகாசம் தேவை என்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் சிறிலங்காவின் சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு ஒரு பில்லியன் டொலர் மானியக் கொடைகளை வழங்குகிறது சீனா

சீனாவினால் மேற்கொள்ளப்பட்ட கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை இடைநிறுத்த சிறிலங்கா அரசாங்கம் உத்தரவிட்ட பின்னரும், சிறிலங்காவுக்கு ஒரு பில்லியன் டொலர் மானியக் கொடைகளை வழங்க சீனா முன்வந்துள்ளதாக, சிறிலங்கா அரசாங்கப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

துறைமுக நகரத் திட்டப் பிரச்சினை இன்னமும் தீரவில்லை – சிறிலங்கா அரசாங்கம்

1.4 பில்லியன் டொலர் பெறுமதியான கொழும்புத் துறைமுக நகரத் திட்டம்  தொடர்பாக சீனாவுடன் உள்ள பிரச்சினைக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை என்றும், சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

துறைமுக நகரத் திட்டம்: சீனாவுக்கு வாக்குறுதி கொடுக்கவில்லை – சிறிலங்கா

சர்ச்சைக்குரிய கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை மீள ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படும் என்று, சீன அதிபருக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி அளித்திருப்பதாக, சீன அமைச்சரை மேற்கொள்காட்டி வெளியான செய்திகளை சிறிலங்கா நிராகரித்துள்ளது.

சீன அதிபரிடம் சரணடைந்தார் சிறிலங்கா அதிபர்

தமது அரசாங்கத்தினால் இடைநிறுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் மீள ஆரம்பிக்கப்படும் என்று, சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம்,  சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.

சீன – சிறிலங்கா அதிபர்கள் பேச்சில் துறைமுக நகர விவகாரத்துக்கு முக்கிய இடம்

சிறிலங்கா அதிபருக்கும், சீன அதிபருக்கும் இடையிலான பேச்சுக்களின் போது, கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் குறித்து கலந்துரையாடப்படும் என்று, சிறிலங்காவுக்கான சீனாவின் சிறப்புத் தூதுவர் லியூ ஜியான்சோ தெரிவித்துள்ளார்.

கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை இடைநிறுத்தியது சிறிலங்கா அரசாங்கம்

கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் நேற்றிரவு நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பெறப்பட்டுள்ளதாகவும், சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

சிறிலங்காவின் வணிகச் செயற்பாடுகளில் இந்தியா தலையிடக் கூடாது – சம்பிக்க ரணவக்க

சீனாவின் கொழும்புத் துறைமுக நகரத் திட்டம், இராணுவப் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படாமல், முற்றிலும்  வணிக நோக்கம் கொண்டதாக இருந்தால், அதுகுறித்த இந்தியா கவலைப்படத் தேவையில்லை என்று சிறிலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.