மேலும்

Tag Archives: ஜோன் அமரதுங்க

படை அதிகாரிகளைக் கொண்டு வெளிநாடுகளின் பயண எச்சரிக்கைகளை நீக்க முயற்சி

சிறிலங்காவுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு வெளிநாடுகள் பல பயண எச்சரிக்கைகளை நீக்குவதற்காக, சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகளைப் பயன்படுத்தி, அரசாங்கம் கடுமையான பரப்புரைகளில் இறங்கியுள்ளன.

36 நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டணமில்லா வருகை நுழைவிசைவு

வரும் மே முதலாம் நாள் தொடக்கம் 36 நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு, வருகை நுழைவிசைவு, கட்டணமின்றி வழங்கப்படவுள்ளது.

இந்தியா – சிறிலங்கா பயணிகள் கப்பல் சேவை – இன்னமும் திட்டமிடல் நிலையில் தான்

இந்தியா- சிறிலங்கா இடையிலான, பயணிகள் கப்பல் சேவை இன்னமும் ஆரம்ப திட்டமிடல் நிலையிலேயே இருப்பதாக, சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஒரே வரிசையில் அரசியல் எதிரிகள்

சிறிலங்காவின் எதிரும் புதிருமான அரசியல் தலைவர்கள், நேற்று கொழும்பில் நடந்த நிகழ்வு ஒன்றில் ஒன்றாகப் பங்கேற்றிருந்தனர்.

சிறிலங்கா அதிபரின் விடாப்பிடியால் தயானின் தூதுவர் பதவிக்கு அங்கீகாரம்

நீண்ட இழுபறிக்குப் பின்னர், ரஷ்யாவுக்கான தூதுவராக கலாநிதி தயான் ஜயதிலகவை நியமிப்பதற்கு, உயர்பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழு அனுமதி அளித்துள்ளது.

சிறிலங்கா அரசின் இணையத் தளங்கள் மீது சைபர் தாக்குதல்

சிறிலங்காவின் சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத விவகாரங்கள் அமைச்சு மற்றும், கேரளாவில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரகம் ஆகியவற்றின் இணையத் தளங்கள், தமிழ் ஈழ சைபர் படை என்று உரிமை கோரியவர்களால் முடக்கப்பட்டுள்ளன.

50 சீன இணையர்களுக்கு கொழும்பில் திருமணம் – சிறிலங்கா அரசே நடத்தி வைத்தது

50 சீன இணையர்களுக்கு நேற்று கொழும்பு நகரசபை மைதானத்தில் பிரமாண்ட திருமண விழா இடம்பெற்றது. சிறிலங்கா அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்த திருமணவிழாவில் அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

செவ்வாயன்று அவுஸ்ரேலியா புறப்படுகிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வரும் செவ்வாய்க்கிழமை அவுஸ்ரேலியாவுக்கு அரசுமுறைப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்கா அதிபர் ஒருவர், அவுஸ்ரேலியாவுக்கு அரசுமுறைப் பயணத்தை மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.

200 சீன இணையர்களுக்கு ஒரே நேரத்தில் சிறிலங்காவில் மாபெரும் திருமணம்

சீனாவைச் சேர்ந்த 200 இணையர்களுக்கு சிறிலங்காவில் ஒரே நேரத்தில் திருமணம் இடம்பெறவுள்ளது. சிறிலங்காவின் சுற்றுலாத்துறை அபிவிருத்தி  அமைச்சர் ஜோன் அமரதுங்க நாடாளுமன்றத்தில் நேற்று இதனை அறிவித்தார்.

யாழ். ஆயரைச் சந்தித்தார் சிறிலங்கா அதிபர்

தேசிய நத்தார் விழா கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக இன்று யாழ்ப்பாணம் சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, யாழ். ஆயர் வண.ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.