மேலும்

மாணவி வித்தியாவுக்கு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

vithya-memo-colombo (1)புங்குடுதீவில், கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியா சிவலோகநாதனுக்கு, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நேற்றுமாலை மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், மத்த் தலைவர்கள் உள்ளிட்ட பெருமளவானோர் கலந்து கொண்டனர்.

சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோசி சேனநாயக்கவின் ஏற்பாட்டில் நேற்று மாலை நடந்த, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் பங்கேற்றவர்கள், வித்தியா படுகொலையைக் கண்டிக்கும் வாசகங்கள் அடங்கிய அட்டைகளையும், அவருக்கு அஞ்சலி செலுத்தும் வாசகங்கள் தாங்கிய அட்டைகளையும் வைத்திருந்தனர்.

vithya-memo-colombo (2)

vithya-memo-colombo (3)vithya-memo-colombo (4)vithya-memo-colombo (5)vithya-memo-colombo (6)

மாலைப்பொழுத்தில் அனைவரும் கைகளில் மெழுகுவர்த்தியை ஏந்தியபடி இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன, பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், மற்றும், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், மதகுருமார், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *