மேலும்

முப்படையினரைக் கட்டுப்படுத்தாத சிறிலங்காவின் குடிவரவுச் சட்டங்கள்

குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்துக்குத் தெரிவிக்காமல், சிறிலங்காவின் ஆயுதப்படை அதிகாரிகள் வெளிநாட்டுக்குச் செல்வதற்கு அதிகாரம் உள்ளதாக குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நிகால் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா கடற்படையின் கப்பல்களில் நாட்டை விட்டு வெளியேறுபவர்கள் பற்றிய விபரங்கள் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்துக்குக் கிடைக்கிறதா என்று அனித்த என்ற சிங்கள ஊடகம் எழுப்பிய கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

இதுதொடர்பாக முடிவெடுப்பதற்கு சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சுக்கும், தமது திணைக்களத்துக்கும் அதிகாரம் இருப்பதாகவும், நிகால் ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, இதுபற்றி சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் தினேஸ் பண்டாரவிடம் கேள்வி எழுப்பிய போது, இந்த விடயம் குறித்து தனிப்பட்ட முறையில் தமக்கு தெரியாது என்றும், குடியரவு, குடியகல்வு விவகாரங்களைக் கையாளுவதற்கு சிறிலங்கா கடற்படை தனிப் பிரிவு ஒன்றைக் கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

அந்தப் பிரிவு, குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்துக்கு தகவல்களை வழங்குகிறதா என்று தனக்குத் தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *