மேலும்

Tag Archives: கிழக்கு மாகாணசபை

நள்ளிரவுடன் கலைகிறது கிழக்கு மாகாணசபை – ஆளுனரின் கையில் நிர்வாகம்

கிழக்கு மாகாணசபை இன்று நள்ளிரவுடன் கலைக்கப்படவுள்ள நிலையில், மாகாணசபையின் நிர்வாகத்தை ஆளுனர் ரோகித போகொல்லாகம நாளை கையில் எடுத்துக் கொள்ளவுள்ளார்.

20 ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு கிழக்கு, மேல் மாகாணசபைகள் அங்கீகாரம்

சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள, 20 ஆவது அரசியலமைப்பு திருத்த வரைவுக்கு, கிழக்கு மாகாணசபையும், மேல் மாகாணசபையும் இன்று அங்கீகாரம் அளித்துள்ளன.

20 ஆவது திருத்தச்சட்ட வரைவினால் கிழக்கு மக்களுக்கே பேரிழப்பு

20 ஆவது திருத்தச்சட்ட வரைவு சிறிலங்கா அரசாங்கத்தினால்  நிறைவேற்றப்பட்டால், கிழக்கு மாகாணமே பெரும் இழப்புகளைச் சந்திக்கும் என்று தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் எச்சரித்துள்ளன.

பதவி விலகாமலேயே அதிகளவு மாகாணசபை உறுப்பினர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி

மாகாணசபை உறுப்பினர்களாகவும், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களாகவும் இருந்து கொண்டே, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட முடியும் என்பதால், இம்முறை அதிகளவான மாகாணசபை உறுப்பினர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வடக்கு, கிழக்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளின் கட்சித்தாவல்

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில், கடந்த ஓரிரு நாட்களில் வடக்கு, கிழக்கில் முஸ்லிம் அரசியல்வாதிகள் பலர் கட்சி தாவியுள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தலில் குதிக்கும் 13 கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள்

வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், சுமார் 13 வரையான கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்றைய சாதகமான சூழலைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் – இரா.சம்பந்தன்

அனைத்துலக சமூகமும், சிறிலங்கா அரசாங்கமும் எமக்கு சாதகமாக இருக்கின்ற சூழ்நிலையை, நாம் சரியாகப் பயன்படுத்தத் தவறுவோமானால் மீண்டும் பூச்சிய நிலைக்கே செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

கவிழும் நிலையில் கிழக்கு மாகாணசபை – ஆறு உறுப்பினர்கள் ஆதரவை விலக்கினர்

கிழக்கு மாகாணசபையில் ஆட்சியமைக்க சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்கிய ஆதரவை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆறு உறுப்பினர்கள், இன்று விலக்கிக் கொண்டுள்ளனர்.

கிழக்கு மாகாணசபையில் இரண்டு அமைச்சுகள், பிரதித் தவிசாளர் பதவிகளைப் பெறுகிறது கூட்டமைப்பு

இரண்டு அமைச்சுப் பதவிகள் மற்றும் பிரதித் தவிசாளர் பதவிகளைப் பெற்றுக் கொண்டு, கிழக்கு மாகாண அமைச்சரவையில் இணைந்து கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணங்கியுள்ளதாக சண்டே ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைத்தது மக்களின் ஆணைக்கு எதிரானது – இரா.சம்பந்தன்

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மக்கள் அளித்த ஆணைக்கு முரணாகவே, கிழக்கு மாகாணசபையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.