மேலும்

Tag Archives: காவல்துறை

புங்குடுதீவு மாணவி படுகொலை – காவல்துறையின் தவறுகள் குறித்த விசாரணை அறிக்கை கையளிப்பு

புங்குடுதீவில் மாணவி வித்தியா சிவலோகநாதன் கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, அங்கு பதற்றநிலை ஏற்பட்டதற்கான காரணங்களை ஆராய்ந்த சிறப்புக் காவல்துறைக் குழுவின் விசாரணை அறிக்கை சிறிலங்கா காவல்துறை மா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா இராணுவத்தின் துப்பாக்கியாலேயே ரவிராஜ் படுகொலை – நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ந.ரவிராஜ் படுகொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, சிறிலங்கா இராணுவத்துக்குச் சொந்தமானது என்று கண்டறியப்பட்டுள்ளதாக, குற்றப்புலனாய்வு பிரிவினர்,இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். 

மைத்திரியின் பாதுகாப்புக்குப் பொறுப்பான அதிகாரி பதவிஇறக்கம்

சிறிலங்கா அதிபர் பாதுகாப்புப் பிரிவின் புதிய பொறுப்பதிகாரியாக சிறிலங்கா காவல்துறையின் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் முனசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா காவல்துறை மா அதிபர் கடந்த ஜூன் முதலாம் நாள் தொடக்கம் இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.

சம்பூர் காணிகளில் இருந்து தமிழ்மக்கள் மீண்டும் விரட்டியடிப்பு

சம்பூரில், அண்மையில் மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட, காணிகளுக்குள் உரிமையாளர்கள் நுழைவதற்குத் தடைவிதித்துள்ள சிறிலங்கா காவல்துறையினர், அங்கு தற்காலிக குடில்களை அமைத்து தங்கியிருந்தவர்களையும், துப்பரவுப் பணியில் ஈடுபட்டிருந்தவர்களையும், வெளியேற்றியுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ கைது

சிறிலங்காவின் முன்னாள் அமைச்சரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்னான்டோ, சற்றுமுன்னர் சிறிலங்கா காவல்துறையின் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலை அச்சுறுத்தல் விடுத்தார் கோத்தா – முன்னாள் காவல்துறை பேச்சாளர் பரபரப்பு செவ்வி

முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் கொலை அச்சுறுத்தலினால் தான், நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக, சிறிலங்காவின் முன்னாள் காவல்துறைப் பேச்சாளர் பிரசாந்த ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

கோத்தாவிடம் இரண்டு மணி நேரம் விசாரணை

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவிடம், சிறிலங்கா காவல்துறையின் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தியுள்ளனர்.