பலாலி, காங்கேசன்துறையில் பொருத்த ஸ்கானர்களை வழங்கியது அவுஸ்ரேலியா
வடக்கின் இரண்டு உள்நுழைவு முனையங்களில் பொதிகளை சோதனையிடுவதற்கான ஸ்கானர் கருவிகளை அவுஸ்ரேலியா கொடையாக வழங்கியுள்ளது.
அவுஸ்ரேலியாவின் எல்லைப் படைகளால் கொடையாக வழங்கப்பட்டுள்ள இந்த உயர் தொழில்நுட்ப ஸ்கானர்களை கையளிக்கும் நிகழ்வு நேற்று காங்கேசன்துறையில் இடம்பெற்றது.
சிறிலங்காவுக்கான அவுஸ்ரேலிய தூதுவர் மத்யூ டக்வேர்த், சிறிலங்கா சுங்கப் பணிப்பாளர் சீவலி அருகொடவிடம் இவற்றைக் கையளித்தார்.
இந்த நிகழ்வில் அவுஸ்ரேலிய சுங்கப் பணிப்பாளர் நாயகம் போல் எட்வர்ட்ஸ், அவுஸ்ரேலிய தூதரக அதிகாரிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுக பயணிகள் முனையம் ஆகியவற்றில் இந்த ஸ்கானர்கள் பொருத்தப்படவுள்ளன.


