மேலும்

Tag Archives: எம்.ஏ.சுமந்திரன்

அதிகாரப்பகிர்வு குறித்து பரிசீலிக்க 4 பேர் கொண்ட குழு – சிறிலங்கா அதிபரால் நியமிப்பு

புதிய அரசியலமைப்பின் அதிகாரங்களைப் பகிர்வு குறித்து பரிசீலிப்பதற்கு நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்றை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.

பலாலி விமான நிலைய அபிவிருத்தி – சிறிலங்கா அரசுடன் கூட்டமைப்பு பேச்சு

சிறிலங்கா விமானப்படையின் வசமுள்ள பலாலி விமான நிலையத்தை பயணிகள் விமான நிலையமாக அபிவிருத்தி செய்வது குறித்து சிறிலங்கா அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு நடத்தியுள்ளது.

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி அமைச்சை உருவாக்க ரணில் இணக்கம்

வடக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சின் பெயரை, வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சு என்று பெயர் மாற்றம் செய்வதற்கு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர்: சபாநாயகரின் முடிவு இன்று

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பான சர்ச்சை குறித்து சபாநாயகர் கரு ஜெயசூரிய தனது முடிவை இன்று நாடாளுமன்றத்தில் அறிவிக்கவுள்ளார்.

தப்புமா மகிந்தவின் பதவி? – சுமந்திரனின் கேள்வியால் சிக்கல்

எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டது தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் எழுப்பிய கேள்விகளை அடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக வரும் வெள்ளிக்கிழமை முடிவை அறிவிக்கவுள்ளார் சபாநாயகர் கரு ஜெயசூரிய.

சுமந்திரனின் புதிய வாதம்- சூடுபிடிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம்

எதிர்க்கட்சித் தலைவர் பதவி மகிந்த ராஜபக்சவுக்கே வழங்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா பொதுஜன முன்னணி வலியுறுத்தி வரும் நிலையில், அந்தப் பதவியை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அரசியல் கைதிகள் விவகாரம் – சிறிலங்கா அதிபர் சாதகமான பதில்

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சாதகமான பதிலை அளித்துள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஐதேமு ஆட்சியமைக்க கூட்டமைப்பு ஆதரவு – மைத்திரிக்கு14 எம்.பிக்கள் அவசர கடிதம்

கடந்த ஒக்ரோபர் 26ஆம் நாளுக்கு முன்னர் இருந்த ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை மீண்டும், ஆட்சியில் அமர்த்துவதற்கு தமிழ்த் ஆதரவு அளிப்பதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு தேசியக் கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து கடிதம் அனுப்பியுள்ளனர்.

கூட்டமைப்புடன் சிறிலங்கா அதிபர் ஒன்றரை மணிநேரம் பேச்சு

இரா.சம்பந்தன் தலைமையிலான, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து நீண்ட பேச்சுக்களை நடத்தியது.

அரசியல் கைதிகள் விடுதலை – அடுத்தவாரம் முடிவெடுப்போம் என அனுப்பி வைத்தார் சிறிலங்கா அதிபர்

அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து. பிரதமர், சட்டமா அதிபர் உள்ளிட்ட தரப்புகளுடன் கலந்துரையாடி, அடுத்த வாரம் முடிவு செய்யலாம் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் ஒரு வாக்குறுதியைக் கொடுத்து அனுப்பியுள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.