இந்திய தூதரக பாதுகாப்பு ஆலோசகராக பொறுப்பேற்றார் கப்டன் அசோக் ராவ்
கொழும்பிலுள்ள இந்தியத் தூதுரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகராக கப்டன் அசோக் ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தப் பதவியில் இருந்த கப்டன் பிரகாஸ் கோபாலன், பணியை முடித்துக் கொண்டு நாடு திரும்பியதை அடுத்தே, கப்டன் அசோக் ராவ், கொழும்பில் பணிகளைப் பொறுப்பேற்றுள்ளார்.




