பிரகீத் கடத்தல் வழக்கில் சிறிலங்கா இராணுவத் தளபதியும் விசாரணைக்கு அழைப்பு
காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தக் கோரி, அவரது மனைவி சந்தியா எக்னெலிகொட தாக்கல் செய்திருந்த வழக்கில், பிரதிவாதிகளாக சிறிலங்கா இராணுவத் தளபதியையும் இராணுவ புலனாய்வுப் பிரிவுத் தளபதியை சேர்ப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.





