மேலும்

Tag Archives: அமெரிக்கா

மகிந்த நடத்தியது சர்வாதிகார ஆட்சி – அமெரிக்க உயரதிகாரியின் கருத்து

சிறிலங்காவில் ஜனநாயகத்தை மீளமைப்பதற்கும், இனப்பதற்றத்தின் காயங்களை ஆற்றுவதற்கும், சிறிலங்காவின் புதிய அரசாங்கத்துக்கு உதவத் தயாராக இருப்பதாக அமெரிக்கா உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் நிகழ்ந்த மாற்றங்களின் பின்னணியில் அமெரிக்கா- சூசகமாக தெரிவித்த ஜோன் கெரி

சிறிலங்காவில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரக் குழு முன்பாக உரையாற்றும்போது தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கான தூதுவராக முக்கிய இராஜதந்திரியை நியமிக்கிறது அமெரிக்கா

சிறிலங்காவுக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக, தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் பிரதி உதவி இராஜாங்கச் செயலர் அதுல் கெசாப் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிலங்காவின் முக்கிய பங்காளராக அமெரிக்கா மாறியுள்ளது – மங்கள சமரவீர உரை

சிறிலங்காவின் பிரதான பொருளாதாரப் பங்காளராக அமெரிக்கா மாறியிருப்பதாகவும், சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியிருப்பதாகவும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ஐ.நா அறிக்கையை தாமதப்படுத்த அமெரிக்கா இணக்கம்

போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக புதிய நீதிப் பொறிமுறை ஒன்றை உருவாக்குவதற்கு காலஅவகாசம் அளிக்கும் வகையில், ஐ.நாவின் விசாரணை அறிக்கை வெளியிடப்படுவது தாமதிக்கப்படும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மகிந்த ஆட்சியில் பதுக்கிய சொத்துக்களை மீட்க உலக வங்கியுடன் இணைந்து நடவடிக்கை

சிறிலங்காவின் முன்னைய ஆட்சியாளர்களால், முறைகேடான வகையில் சேகரிக்கப்பட்டு, உலகின் பல்வேறு நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள சொத்துக்களைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கை குறித்து உலக வங்கியுடன் ஆலோசனை நடத்தப்படவுள்ளது.

ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிரான விவாதம் செப்ரெம்பருக்கு ஒத்திவைப்பு?

சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக ஐ.நா நடத்திய விசாரணை அறிக்கையின் மீதான மீளாய்வு, ஐ,நா மனித உரிமைகள் பேரவையில் அடுத்த மாதம் நடைபெறாது என்றும், அது செப்ரெம்பர் மாத அமர்வுக்கு ஒத்திவைக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிலங்காவை எதற்காக அரவணைக்க வேண்டும்? – ஒரு அமெரிக்கப் பார்வை

அமெரிக்க-சிறிலங்கா உறவுகளை மீளவும் நிறுவுவதற்கான திட்டங்கள் எதனையும் அமெரிக்கா முன்னெடுக்காது விட்டால், 21 மில்லியன் மக்களைக் கொண்ட கேந்திர முக்கியத்துவம் மிக்க இலங்கைத் தீவுடன் நெருக்கமான உறவைப் பேணுவதற்கான வாய்ப்பை இழக்கும் ஆபத்தை எதிர்நோக்க வேண்டியேற்படும்.

சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தைப் பிற்போடுமாறு ஜெனிவாவில் கோரவுள்ளது அமெரிக்கா

தற்போதைய அரசியல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தைப் பிற்போடுமாறு, ஐ,நா மனித உரிமைகள் பேரவையிடம், அமெரிக்கா கோரக் கூடும் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா மீதான அழுத்தங்கள் தொடரும் – கூட்டமைப்புக்கு அமெரிக்கா உறுதிமொழி

சிறிலங்காவில் தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை அமெரிக்கா தொடர்ந்து போராடும் என்று, தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் உறுதியளித்துள்ளார்.