மேலும்

Tag Archives: மைத்திரிபால சிறிசேன

மோடியின் பாணியில் மைத்திரி – கண்டி கூட்டத்தில் பரபரப்பு

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, அதிகாரபூர்வமாக நேற்று கண்டியில் தனது தேர்தல் பரப்புரையை ஆரம்பித்துள்ளார்.

நாளை முக்கிய முடிவை அறிவிக்கிறார் அமைச்சர் வாசு – மைத்திரியை ஆதரிப்பார்?

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் தொடர்ந்தும் நீடிப்பதா இல்லையா என்று, அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, நாளை முக்கிய தீர்மானமொன்றை எடுக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திட்டமிட்டே மகிந்தவுடன் கைகுலுக்கவில்லை – காரணத்தை விபரிக்கிறார் மைத்திரி

சிறிலங்கா அதிபருடன் கைகுலுக்கி தனது கைகளில் கறையை ஏற்படுத்திக் கொள்ள விரும்பாததால் தான், நேற்று அவர் கைகுலுக்க முயன்றபோது அதனைத் தவிர்த்துக் கொண்டதாக கூறியுள்ளார் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன.

ஹெல உறுமயவுக்குள் பிளவு – ஒரு பகுதி மகிந்தவுக்கு ஆதரவு

ஜாதிக ஹெல உறுமயவின் ஒரு பகுதி பௌத்த பிக்குகள், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்துகிறார் மைத்திரிபால

எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தேர்தல் ஆணையாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தனது சொத்துகள் பற்றிய விபரங்களை எவரேனும் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

எதிரணிக்குப் பாய்ந்தார் ஹிருணிகா

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா பிறேமச்சந்திர, எதிரணியுடன் இணைந்து, பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார்.

19 வேட்பாளர்கள் போட்டியிடும் சிறிலங்கா அதிபர் தேர்தல்

அடுத்தமாதம் 8ம் நாள் நடைபெறும் சிறிலங்கா அதிபர் தேர்தலில், மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட 19 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக, சிறிலங்கா தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். 

ஐதேகவின் வலையிலும் ‘பெரியமீன்’ சிக்கியது?

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா பிறேமச்சந்திர இன்று எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவிக்கலாம் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்களில் செய்திகள் அடிபடுகின்றன.

மைத்திரியை இன்று நேரில் சந்திக்கிறார் மகிந்த

அரசாங்கத்துக்குள் இருந்து வெளியேறிய பின்னர், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும், எதிரணியின் பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேனவும், இன்று முதல் முறையாக நேருக்குநேர் சந்தித்துப் கொள்ளவுள்ளனர்.

வேட்புமனுவில் கையெழுத்திட்டார் மைத்திரி – 19 வேட்பாளர்கள் போட்டி

சிறிலங்காவில் வரும் ஜனவரி 8ம் நாள் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக 19 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக, தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.