மேலும்

Tag Archives: மைத்திரிபால சிறிசேன

சிறிலங்கா: எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபாலவால் அறநெறி சார்ந்த சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியுமா?

சந்திரிகா குமாரதுங்க மற்றும் ராஜபக்ச அரசாங்கங்களின் கீழ் கிட்டத்தட்ட பத்தாண்டுகளாக சிறிசேன அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். இவர் இந்த அரசாங்கங்களால் தொழிலாளர்களின் சமூக உரிமைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட திட்டமிடப்பட்ட தாக்குதல்களுக்கும் குற்றங்களுக்கும் குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான வக்கிரமான இனவாதப் போருக்கு ஆதரவாகச் செயற்பட்டுள்ளார்.

கூட்டமைப்பை மைத்திரி பக்கம் இழுக்க எதிரணி தீவிர முயற்சி

சிறிலங்கா அதிபர் தேர்தல் தொடர்பாக, மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக முன்னிறுத்தியுள்ள எதிரணியின் சார்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அதிகாரபூர்வமற்ற பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவர் எதிரணியுடன் இணையவுள்ளனர்

இந்த வாரத்தில் மேலும் ஐந்து ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிரணியுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழர் பிரச்சினைக்கான தீர்வு குறித்து தேசிய அரசே ஆராயுமாம் – நழுவுகிறார் மைத்திரி

அதிபர் தேர்தலுக்குப் பின்னர் அமைக்கப்படும் தேசிய அரசாங்கமே, தமிழர் பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஆராயும் என்று, எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

முக்காற் பங்கு போரை வென்றது நானே – மார்தட்டுகிறார் சந்திரிகா

விடுதலைப் புலிகளுக்கு எதிராக போரின் முக்காற் பங்கைத் தானே வெற்றி கொண்டதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க.

மகிந்தவைப் பாதுகாக்கும் மைத்திரி – கருத்துக்கூற மறுக்கிறது கூட்டமைப்பு

ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணையில் இருந்து சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவைப் பாதுகாப்பேன் என்று, எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, தெரிவித்திருப்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருத்து வெளியிட மறுத்துள்ளது.

“ஜனவரி 8க்குப் பின்னரும் நானே சிறிலங்கா அதிபர்” – என்கிறார் மகிந்த

வரும் ஜனவரி 8ம் நாள் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்குப் பின்னரும் தானே சிறிலங்கா அதிபராகத் தொடர்ந்து நீடிப்பேன் என்று தெரிவித்துள்ளார் மகிந்த ராஜபக்ச.

மைத்திரி களமிறங்கியது மேற்குலக சூழ்ச்சி – மகிந்த சமரசிங்க

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு மேற்குலக சக்திகள் சதி செய்வதாக சிறிலங்கா அரசாங்கம்  மீண்டும் குற்றம்சாட்டியுள்ளது.

சிறிலங்கா அதிபர் தேர்தலில் 10 வேட்பாளர்கள் போட்டி

அடுத்த மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு 10 வேட்பாளர்கள் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

”அதிபர் மாளிகையில் காலடி வைக்கமாட்டேன்” – மைத்திரி சூளுரை

அடுத்தமாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தாம் வெற்றி பெற்றால், அதிபர் மாளிகையில் காலடி எடுத்து வைக்கமாட்டேன் என்று எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.