மேலும்

Tag Archives: மங்கள சமரவீர

அவுஸ்ரேலியப் பயணத்தில் இருந்து மங்கள சமரவீர விலகல்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் அவுஸ்ரேலியாவுக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்தில் இருந்து அமைச்சர் மங்கள சமரவீர விலக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை அமைச்சரவை மாற்றம் – மங்கள, ரவியின் பதவிகள் பறிப்பு?

சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இன்று காலை அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளது. இதன் போது நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் இப்போது வகித்து வரும் அமைச்சுப் பதவிகளை இழக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கி்ன்றன.

செவ்வாயன்று அவுஸ்ரேலியா புறப்படுகிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வரும் செவ்வாய்க்கிழமை அவுஸ்ரேலியாவுக்கு அரசுமுறைப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்கா அதிபர் ஒருவர், அவுஸ்ரேலியாவுக்கு அரசுமுறைப் பயணத்தை மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.

திங்களன்று அமைச்சரவை மாற்றம் – மங்களவிடம் இருந்து வெளிவிவகார அமைச்சு பறிபோகிறது

சிறிலங்கா அமைச்சரவை வரும் திங்கட்கிழமை மாற்றியமைக்கப்படவுள்ளதாகவும், வெளிவிவகார அமைச்சர் பதவியில் இருந்து மங்கள சமரவீர நீக்கப்படவுள்ளதாகவும் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவுக்கு ஜிஎஸ்பி பிளஸ் – மே 15 இல் வெளியாகிறது சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு

வரும் மே 15 ஆம் நாள் பிரசெல்சில் வெளியிடப்படும் சிறப்பு வர்த்தமானி அறிவித்தலின் மூலம் சிறிலங்காவுக்கு மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்படும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

குற்றவாளிகளின் கூடாரமாக பயன்படுத்தப்பட்ட சிறிலங்கா தூதரகங்கள் – ஒப்புக்கொள்ளும் சிறிலங்கா அரசு

சிறிலங்காவில் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கான புகலிடமாக வெளிநாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகங்கள் கடந்த ஆட்சிக்காலத்தில் பயன்படுத்தப்பட்டது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அமைதியைக் கட்டியெழுப்புதல் குறித்த சிறிலங்கா- ஐ.நா இடையிலான ஐந்தாவது பேச்சு நிறைவு

அமைதியைக் கட்டியெழுப்புதல் தொடர்பாக ஐ.நாவுக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையிலான ஐந்தாவது கூட்டம் நேற்று முடிவுக்கு வந்தது.

போர்க்குற்றங்களை நிரூபிக்கிறது மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் நூல் – மங்கள சமரவீர

மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன எழுதியுள்ள ‘நந்திக்கடலுக்கான பாதை’ நூல், சிறிலங்கா ஆயுதப் படைகளுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் இன்று காலஅவகாசம் கோருவார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று உரையாற்றவுள்ளார். இதன்போது, 2015ஆம் ஆண்டு பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த மேலதிக காலஅவகாசத்தை வழங்குமாறு அவர் கோரிக்கை விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“இதயத்தில் இடம்பிடித்த நாடு சிறிலங்கா” – மங்களவிடம் மனம் திறந்த ஐ.நா பொதுச்செயலர்

ஜெனிவாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெசை நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தினார்.