மேலும்

Tag Archives: பொறுப்புக்கூறல்

சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க அவசரப்படமாட்டோம் – என்கிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும், சிறப்பு நீதிமன்றத்தை  அமைக்கும் விவகாரத்தில், தமது அரசாங்கம் அவசரமாகச் செயற்படாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜெனீவா தீர்மான விவகாரம்- சிறிலங்கா வந்த ஐ.நா சட்டத்துறைக் குழு

ஜெனீவா தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுவது தொடர்பான நிலைமைகளை ஆராய்வதற்காக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் சட்டத்துறை சார் குழுவொன்று கடந்தவாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நம்பகமான பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கு 48 வீதமான இலங்கையர்கள் ஆதரவு

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்களுக்குப் பொறுப்புக்கூறுவதற்கு, நம்பகமான பொறிமுறை அமைக்கப்பட வேண்டும் என்று, 48.1 வீதமானோர் கருத்துக்கணிப்பு ஒன்றில் கருத்து வெளியிட்டுள்ளனர்.

பொறுப்புக்கூறல்: சிறிலங்கா படைகளுடன் இணைந்து செயற்பட பிரித்தானியா முடிவு

சிறிலங்கா தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கிய பிரித்தானியா, பொறுப்புக்கூறல் விவகாரங்கள் தொடர்பாக சிறிலங்கா படைகளுடன் இணைந்து செயற்படவுள்ளது.

மோல்டாவில் சிறிலங்காவுடன் விவாதிக்க பிரித்தானியா திட்டம்

மோல்டாவில் நாளை ஆரம்பமாகவுள்ள, மூன்று நாள் கொமன்வெல்த் உச்சி மாநாட்டு நிகழ்ச்சி நிரலில், சிறிலங்கா விவகாரம் இடம்பெறாவிட்டாலும், ஜெனிவா தீர்மானம் குறித்து சிறிலங்காவுடன் விவாதிக்க பிரித்தானியா திட்டமிட்டுள்ளது.

நீதி, பொறுப்புக்கூறல் பாதையில் சிறிலங்கா பயணிக்க வேண்டியது முக்கியம் – சமந்தா பவர்

நீதி, பொறுப்புக்கூறல் பாதையில் சிறிலங்காவின் தலைவர்கள் பயணிக்க வேண்டியது முக்கியம் என்று ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

துறைசார் வல்லுனர் குழுக்களை அமைக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு

ஜெனிவா தீர்மானத்துக்கு அமைய, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்துக்கான பொறிமுறைகளை உருவாக்குவது தொடர்பாக, கருத்துக்களை அறிந்து கொள்வதற்காக துறைசார் வல்லுனர்களைக் கொண்ட குழுக்களை அமைக்க, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா குறித்த விசாரணை அறிக்கை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது – அல் ஹுசேன்

சிறிலங்கா தொடர்பான தமது பணியகத்தின் விசாரணை அறிக்கை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

ஜெனிவா தீர்மானத்துக்கு நியூசிலாந்தும் இணை அனுசரணை

ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட சிறிலங்கா தொடர்பான தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்குவதாக நியூசிலாந்தும் அறிவித்துள்ளது.

ஜெனிவா தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்க முண்டியடிக்கும் நாடுகள்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பாக நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு நேற்று வரை 38 நாடுகள் இணை அனுசரணை வழங்கியுள்ளன.