மேலும்

Tag Archives: கடற்படை

சீனாவுடனான நட்பினால் இந்தியாவை இழக்கமாட்டோம் – சிறிலங்கா பிரதமர்

சீனாவுடனான சிறிலங்காவின் நட்பு, இந்தியாவை இழக்கச் செய்து விடாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

புலிகளுக்கு எதிரான போரின் போது வேவு பார்த்தது இந்திய விமானம் – ஒப்புக்கொள்கிறது இந்தியா

விடுதலைப் புலிகளுடன் போர் நடந்து கொண்டிருந்த போது, சிறிலங்காவைச் சுற்றிய வான்பரப்பில் ரியூ 142 எம் என்ற இந்திய கடற்படையின் நீண்ட தூர கடல்சார் கண்காணிப்பு விமானம் விரிவான கண்காணிப்பில் ஈடுபட்டிருந்ததாக இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லன்பா தெரிவித்துள்ளார்.

ரவிராஜ் கொலை வழக்கு – விடுவிக்கப்பட்ட 3 கடற்படை அதிகாரிகளை கண்டுபிடிக்க சிஐடிக்கு உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் இருந்து கொழும்பு மேல் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்ட சிறிலங்கா கடற்படையின் மூன்று புலனாய்வு அதிகாரிகளையும் கண்டுபிடிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறிலங்கா- அமெரிக்க மரைன் கொமாண்டோக்கள் மீண்டும் கூட்டுப் பயிற்சி

சிறிலங்கா கடற்படையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ‘மரைன்’ பற்றாலியனுடன் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவதற்கே அமெரிக்க கடற்படையின் ‘மரைன்’ படைப்பிரிவினருடன், ‘யுஎஸ்எஸ் கொம்ஸ்ரொக்’ என்ற தரையிறக்க கப்பல் கொழும்பு துறைமுகத்துக்குச் சென்றுள்ளதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் இந்திய கடற்படையின் ஆய்வுக் கப்பல்

இந்திய கடற்படையின் நீர்ப்பரப்பு ஆய்வுக் கப்பலான ஐஎன்எஸ் தர்ஷக்  நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

16 மாதங்களில் சிறிலங்கா கடற்படை ஈட்டியுள்ள 3 பில்லியன் ரூபா வருமானம்

கடந்த 16 மாதங்களில் வணிகக் கப்பல்களுக்கு அளித்து வந்த பாதுகாப்புச் சேவையின் மூலம், சிறிலங்கா கடற்படை, 3 பில்லியன் ரூபாவை வருமானமாகப் பெற்றுள்ளது. காலியில் உள்ள நிலையத்தில் இருந்தே இந்த வருமானம் பெறப்பட்டுள்ளது.

8 இலங்கை மாலுமிகளுடன் எண்ணெய்க் கப்பல் கடத்தப்பட்டது

சிறிலங்கா மாலுமிகளுடன் இந்தியப் பெருங்கடலில் பயணித்த எண்ணெய்க் கப்பல் ஒன்று சோமாலிய கடற்கொள்ளையர்களினால், கடத்தப்பட்டுள்ளது. இந்தக் கப்பலில் இலங்கை மாலுமிகள் எட்டுப் பேர் இருந்தனர் என்று சிறிலங்கா கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இராணுவ செயற்பாடுகளுக்கு தடை

அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக சீனாவுடன் செய்து கொள்ளப்படவுள்ள உடன்பாடு, துறைமுகத்தை இராணுவ நோக்கில் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கின்ற வகையில் அமைந்திருப்பதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ் இளைஞர்களைக் கடத்திய கடற்படை அதிகாரிக்கு விளக்கமறியல் நீடிப்பு

கொழும்பில் தமிழ் இளைஞர்கள், மாணவர்கள் கடத்தப்பட்டு கப்பம் கோரப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறிலங்கா கடற்படை அதிகாரியை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாணவர்கள் கடத்திக் கொலை – சிறிலங்கா கடற்படை அதிகாரிகள் இருவர் கைது

கொழும்பில் ஆறு மாணவர்களைக் கடத்தி கப்பம் கோரி, கொலை செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில், சிறிலங்கா கடற்படை அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.