மேலும்

மைத்திரி அரசில் உள்ள சுதந்திரக் கட்சியினரை பதவி விலகுமாறு மகிந்த தரப்பு அழுத்தம்

மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களை பதவி விலகும் படி, மகிந்த ராஜபக்ச தரப்பினரால் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகிந்த அரசின் முறைகேடு குறித்து விசாரிக்க அவுஸ்ரேலியாவிடம் உதவி கோருகிறது சிறிலங்கா

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் முக்கிய அதிகாரியாகப் பணியாற்றிய ஒருவரிடம் விசாரணை மேற்கொள்வதற்கு அவுஸ்ரேலிய சமஷ்டி காவல்துறையின் உதவியை சிறிலங்கா காவல்துறை நாடியிருக்கிறது.

மூன்று ஆண்டுகளில் 785 மில்லியன் ரூபாவை விமானப் பயணங்களுக்காகச் செலவிட்ட மகிந்த

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கடந்த மூன்று ஆண்டுகளில் வெளிநாடுகளுக்கு மேற்கொண்ட பயணத்துக்காக, சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானங்களை 785 மில்லியன் ரூபாவுக்கு வாடகைக்கு அமர்த்தியுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

ஐ.எஸ் அமைப்புடன் இணைந்து போரிட்ட இலங்கையர் சிரியாவில் விமானத் தாக்குதலில் பலி

ஐஎஸ்Iஎஸ் எனப்படும் இஸ்லாமிய அரசுடன் இணைந்து போரிட்ட சிறிலங்காவைச் சேர்ந்த கராத்தே பயிற்சி ஆசிரியர் ஒருவர் சிரியாவில் கடந்தவாரம் நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

திம்புக் கோட்பாடுகளின் அடிப்படையில் நிலையான அரசியல்தீர்வே தேவை – விக்னேஸ்வரன்

மனிதாபிமான உதவியை வழங்குதல் குறுங்கால இலக்காகவும், இனஅழிப்புக்கு நீதி பெறுவதை மத்திம கால இலக்காகவும், திம்புக் கோட்பாடுகளின் அடிப்படையில் நிலையான அரசியல் தீர்வைக் காணுதல் எமது நீண்டகால இலக்காகவுங் கொண்டு  அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சம்பந்தனிடம் தேசியப் பட்டியல் ஆசனம் கோரும் மூதூர் முஸ்லிம்கள்

கிழக்கில், மட்டுமன்றி வட-கிழக்கிலும் கூட முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக ஏற்றுக் கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகவே இருக்கிறது என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிகாரிகள் அழுத்தம் கொடுக்கவில்லை – முதலமைச்சர் விக்னேஸ்வரன்

இனப்படுகொலை விவகாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்காமல் அடக்கி வாசிக்குமாறு, அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் தமக்கு அழுத்தம் கொடுத்ததாக வெளியான செய்தியை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நிராகரித்துள்ளார்.

சிறிலங்கா – இந்தியா இடையிலான மேம்பாலத்துக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி பச்சைக்கொடி

இராமேஸ்வரத்தையும் தலைமன்னாரையும் இணைக்கும் தலைவழிப்பாதையை அமைப்பதற்கு ஆசிய அபிவிருத்தி வழங்கி நிதி உதவி வழங்கத் தயாராக இருப்பதாக இந்திய அரசாங்கத்துக்குத் தெரிவித்துள்ளது.

முப்படைகளின் தளபதிகளுடன் யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்

சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் பி.எம்.யு.டி.பஸ்நாயக்க இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக, முப்படைகளின் தளபதிகளுடன் யாழ்ப்பாணம் வந்துள்ளார்.

மட்டக்களப்புக்கு இரண்டரை அடி நீளமான வாக்குச்சீட்டு

வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக மட்டக்களப்பு மாவட்டத்துக்கு சுமார் இரண்டரை அடி நீளமான (30 அங்கும்) வாக்குச்சீட்டு அச்சிடப்படுவதாக சிறிலங்கா அரசாங்க பதில் அச்சகர் ஏ.ஜி.பொன்சேகா தெரிவித்துள்ளார்.