அமெரிக்காவுடன் தொடர்ந்து பேசவே இணக்கம்- வரிக்குறைப்பு தீர்மானம் இல்லை
அமெரிக்காவின் பரஸ்பர வரிகள் தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கம் நடத்திய பேச்சுக்களில் இதுவரை எந்த ஆக்கபூர்வமான முடிவும் எட்டப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் பரஸ்பர வரிகள் தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கம் நடத்திய பேச்சுக்களில் இதுவரை எந்த ஆக்கபூர்வமான முடிவும் எட்டப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அண்மைய சிறிலங்கா பயணத்தின் போது, கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாட்டின் உள்ளடக்கங்களை வெளியிடுவதற்கு, இந்தியாவின் இணக்கம் தேவை என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது.
2024 ஆம் ஆண்டு 09 ஆம் இலக்க நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்யும் விடயத்தில், ஆளும் தேசிய மக்கள் சக்தி இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ரவீந்திரநாத் கொழும்பில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான மற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலையில் பாகிஸ்தான் மற்றும் சிறிலங்கா கடற்படைகளுக்கு இடையே நடத்தப்படவிருந்த கூட்டுப் பயிற்சி இந்தியாவின் எதிர்ப்பை அடுத்து கைவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்காவில் அரசியல் கட்சிகள் இன, மத அடையாளங்களை, தமது பெயர்களில் பயன்படுத்துவதைத் தடை செய்யும் வகையிலான, தனிநபர் பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான பேச்சுக்களின் போது, இந்தியாவுடன் தரைவழி இணைப்புத் திட்டத்தைப் பரிசீலிக்க சிறிலங்கா அரசாங்கம் மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மையில் இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்ட பாதுகாப்பு உடன்பாட்டின் உள்ளடக்கத்தை வெளிப்படுத்த வேண்டும் என, சிறிலங்கா கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவின் உறவினர் ஒருவர் அளித்த முறைப்பாட்டுக்கு அமையவே, பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறிலங்காவின் போர் மற்றும் இனப்படுகொலை நினைவுச் சின்னங்கள், பூகோள இருண்ட சுற்றுலா (Dark Tourism) சந்தையின் வளர்ச்சி மற்றும் வருமான அதிகரிப்புக்கான காரணிகளில் ஒன்றாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.