சிறிலங்காவில் தமிழர் பகுதிகளிலேயே அதிகளவு வறுமைநிலை – உலக வங்கி ஆய்வு கூறுகிறது
உலக வங்கியின் அண்மைய ஆய்வின் பிரகாரம், சிறிலங்காவில் தமிழ் மக்கள் அதிகம் வாழும் பிரதேசங்கள் அதியுச்ச வறுமையின் பிடியில் சிக்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
உலக வங்கியின் அண்மைய ஆய்வின் பிரகாரம், சிறிலங்காவில் தமிழ் மக்கள் அதிகம் வாழும் பிரதேசங்கள் அதியுச்ச வறுமையின் பிடியில் சிக்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் திமுகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், வரும் சட்டமன்றத் தேர்தலில், இலங்கைத் தமிழர் பிரச்சி்னை மீண்டும் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறிலங்காவின் புதிய அரசாங்கம் உள்நாட்டுப் போரின் பின்னான நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுத்தமை தொடர்பில் பாராட்டத்தக்க நிலையிலேயே இருப்பினும், அங்கு வாழும் மக்கள் தற்போதும் பல்வேறு சித்திரவதைகள் மற்றும் மீறல்களுக்கு உட்படுவதாக தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிரபாகரன் வரலாற்றில் இடம்பிடித்து விட்டார், அவரது கொள்கைகள் தற்போதைய நிகழ்ச்சி நிரலில் இருந்து வெளியேறிய போதிலும், மறைந்து விடவில்லை என்று முன்னாள் இந்திய இராஜதந்திரியான கோபாலகிருஷ்ணகாந்தி தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் தென்பகுதியில் 2.5 பில்லியன் டொலர்களை பெற்றோலிய சுத்திகரிப்பு ஆலையை நிறுவுவதற்காக முதலீடு செய்வதன் மூலம், தற்போது சிறிலங்காவின் தனிப்பெரும் முதலீட்டாளராக விளங்கும் சீனாவை அந்த நிலையிலிருந்து மிக விரைவில் வெளியேற்றுவதற்கான முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.
கொட்டித் தீர்த்த கனமழை சென் னையை வதம் செய்தது மட்டு மல்லாது வரலாற்றில் தடம் பதித்த சில முக்கியப் பிரமுகர்களின் மரணத்தைக் கூட அடுத்த வீட்டுக்குத் தெரியாமல் அடக்கிப் போட்டுவிட்டது. ஸ்ரீநிவாஸ் – தமிழர்கள் அரசியல் அடிமைத்தனத்தை விட்டு தமிழால் முன்னுக்கு வரவேண்டும் என்ப தையே மூச்சாக கொண்டிருந்தவர்.
சிறிலங்கா மீது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமெரிக்க அதிகாரிகள் பலர் எதிர்த்திருந்தனர். ஆனால் சிறிலங்காவிற்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவரான ரொபேட் ஓ பிளேக் அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலராக பதவி உயர்த்தப்பட்ட பின்னர், இந்தத் தீர்மானத்தை உந்தித் தள்ளினார்.
நோர்வேயின் ஒஸ்லோ நகரின் பிரதி நகரமுதல்வராக ஈழத் தமிழ்ப் பெண்ணான ஹம்சாயினி குணரத்தினம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கம்சி என்று அழைக்கப்படும் இவர், இன்று நடக்கவுள்ள கூட்டத்தில் முறைப்படி, பிரதி நகரமுதல்வராகத் தெரிவு செய்யப்படுவார்.
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுடனான தொடர்புகளை, சீனா தொடர்ந்து பேணி வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
கனடாவின் ரொறன்ரோ நகரில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ‘‘கலப்பு குற்றவியல் விசாரணை கோரி ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் முன்மொழிந்துள்ள தீர்மானமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடும்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையின் நிறைவுப் பகுதி.