மேலும்

பிரிவு: செய்திகள்

யாழ். மாவட்டத்தில் இன்னமும் 5250 ஏக்கர் தனியார் காணிகள் சிறிலங்கா படையினரிடம்

யாழ். மாவட்டத்தில் இன்னமும் 5250 ஏக்கர் தனியார் காணிகள் சிறிலங்கா படையினர் வசம் இருப்பதாக, யாழ். மாவட்டச் செயலர் அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

20 வெளிநாட்டு கடற்படை அதிகாரிகளுக்கு சிறிலங்கா கடற்படை சிறப்புப் பயிற்சி

கடினமான உழைப்பின் மூலம் பெற்றுக் கொண்ட சீரற்ற போர்முறை அனுபவங்களை பெருங்கடல் பிராந்தியத்தின் ஏனைய இராணுவ பங்காளர்களுடன் பகிர்ந்து கொள்வதையிட்டு சிறிலங்கா கடற்படை மகிழ்ச்சி அடைவதாக சிறிலங்கா கடற்படை தலைமை அதிகாரி றியர் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

கடற்படைத் தலைமையகத்தில் தேடுதல் நடத்த குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு நீதிவான் உத்தரவு

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 2008 ஆம் ஆண்டு 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான, கடற்படை அதிகாரியைக் கைது செய்வதற்கு சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்தில் தேடுதல் நடத்துமாறு, கோட்டே நீதிவான் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவுடன் பொருளாதார கூட்டு உடன்பாடு – ரணிலின் புதுடெல்லி பயணத்தில் கைச்சாத்து

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்தின் போது, பொருளாதார கூட்டு உடன்பாடு ஒன்றைச் செய்து கொள்ளவுள்ளார் என்று பிஸ்னஸ் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அம்பாந்தோட்டை விவகாரத்தினால் சிறிலங்கா அமைச்சரவைக் கூட்டத்தில் வாக்குவாதம்

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பாக கடந்தவாரம் சிறிலங்கா அமைச்சரவையில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கொச்சி துறைமுகத்தில் சிறிலங்கா போர்க்கப்பல்கள்

சிறிலங்கா கடற்படையின் இரண்டு ஆழ்கடல் ரோந்துக் கப்பல்கள் நான்கு நாட்கள் பயணமாக இந்தியாவின் கொச்சி துறைமுகத்துக்கு வந்திருப்பதாக இந்திய கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாளை மறுநாள் ஜப்பான் செல்கிறார் சிறிலங்கா பிரதமர்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜப்பானுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். வரும் ஏப்ரல் 10ஆம் நாள் தொடக்கம், 16ஆம் நாள் வரை சிறிலங்கா பிரதமர் ஜப்பானில் தங்கியிருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் இறைமை, சுதந்திரத்தைப் பாதுகாப்பது சீனாவின் கடமை – சீன அரசின் உயர் பிரதிநிதி

சிறிலங்காவுடனான 60 ஆண்டுகால உறவுகளை பலப்படுத்தும் வகையில், சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்திக்கு உதவவும், அதன் சுதந்திரம் மற்றும் இறைமையைப் பாதுகாக்கவும் சீனா கடமைப்பட்டுள்ளது என்று சீனாவின் உயர் அரசியல் ஆலோசகர் உறுதியளித்துள்ளார்.

சிறிலங்காவில் பெண்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கு அவுஸ்ரேலியா உதவி

சிறிலங்காவில் பெண்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கு, அனைத்துலக நிதிக் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து 15 மில்லியன் டொலர் உதவியை வழங்க அவுஸ்ரேலியா முன்வந்துள்ளது.

சிறிலங்கா பிரதமரைச் சந்தித்தார் சீனாவின் உயர்மட்ட ஆலோசகர்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சீன மக்கள் அரசியல் ஆலோசனை சபைக்கான தேசிய குழுவின் தலைவர் யூ செங் ஷெங் நேற்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.