மேலும்

பிரிவு: செய்திகள்

நாட்டுக்கு சாதகமற்ற உடன்பாடுகள் ரத்து செய்யப்படும் – சஜித்

எதிர்காலத்தில் நாட்டிற்கு சாதகமற்ற அனைத்துலக உடன்பாடுகள் ரத்து செய்யப்பட்டு சாதகமான ஒப்பந்தங்கள் மட்டுமே செயற்படுத்தப்படும் என்று புதிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

புளொட், ரெலோவின் ஆதரவைப் பெற ஜேவிபி முயற்சி

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக, அதிபர் தேர்தலில் களமிறங்கியுள்ள அனுரகுமார திசநாயக்கவுக்கு ஆதரவைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் அதிகாரபூர்வமற்ற கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளதாக ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் வஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கோத்தாவுக்கு கருணை காட்டும் சிறிலங்கா நீதிமன்றங்கள்

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு சாதகமான முறையில் சிறிலங்கா நீதிமன்றங்கள் முடிவெடுப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

சிவாஜிலிங்கத்துக்கு பாதுகாப்பு – தேர்தல்கள் ஆணைக்குழு உறுதிமொழி

தமக்குப் போதிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுப்பதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய உறுதி அளித்துள்ளார் என்று அதிபர் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிடும், எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

சஜித் பக்கம் சாய்கிறது ஐக்கிய இடதுசாரி முன்னணி

ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான, ஐக்கிய இடதுசாரி முன்னணி, ஜேவிபி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்கவுக்கு அளிக்க முடிவு செய்த ஆதரவு குறித்து மறுபரிசீலனை செய்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

17 ஆசனங்களைக் கைப்பற்றியது பொதுஜன பெரமுன – இறுதி முடிவு வெளியானது

எல்பிட்டிய பிரதேச சபைக்கு இன்று நடந்த தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன 17 ஆசனங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது.

வாக்குச்சீட்டில் அடுத்தடுத்து கோத்தா, நாமலின் பெயர்கள்

சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கான வாக்குச் சீட்டில், கோத்தாபய ராஜபக்சவின் பெயரும் நாமல் ராஜபக்சவின் பெயரும் அடுத்தடுத்து இடம்பெறவுள்ளன.

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் – வட்டார ரீதியான முடிவுகள் சில

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் வட்டார ரீதியாக கட்சிகள் பெற்றுள்ள வாக்குகள் தொடர்பான அதிகாரபூர்வமற்ற சில முடிவுகள் கிடைத்துள்ளன.

சென்னையில் இருந்து பலாலிக்கு வாரத்தில் 7 விமான சேவைகள் – இந்திய அரசு அனுமதி

சென்னையில் இருந்து பலாலி விமான நிலையத்துக்கு  வாரத்துக்கு ஏழு விமான சேவைகளை நடத்துவதற்கு, எயர் இந்தியாவின் துணை நிறுவனமான, அலையன்ஸ் எயர் நிறுவனத்துக்கு, இந்திய அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

ஆட்சிக்கு வந்தால் சரத் பொன்சேகாவை பாதுகாப்பு அமைச்சராக்குவேன் – சஜித்

தாம் ஆட்சிக்கு வந்தால், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பாதுகாப்புக்குப் பொறுப்பான உயர் பதவிக்கு நியமிக்கப்பட்டு, தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்று ஐதேகவின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.