மேலும்

பிரிவு: செய்திகள்

அரசியலமைப்பு பேரவைக்கு 3 உறுப்பினர்களை நியமிப்பதில் இழுபறி

அரசியலமைப்பு பேரவைக்கு மூன்று சிவில் சமூக உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான பேச்சுக்களில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

விரைவில் சீனா செல்கிறார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியின் குறுகிய நேர சிறிலங்கா பயணத்தை அடுத்து, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பீஜிங்கிற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரகீத் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கின் முக்கிய எதிரிக்கு பிரிகேடியராக பதவி உயர்வு

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட வழக்குடன் தொடர்புடைய சிறிலங்கா இராணுவ புலனாய்வு அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு, ஊடக சுதந்திர அமைப்புகளும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உடன்பாட்டை இறுதி செய்ய வருகிறது சீன குழு

அம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை அமைக்கும் திட்டத்திற்கான உடன்பாட்டை இறுதி செய்வதற்காக சீனாவின் சினோபெக் நிறுவனத்தின், உயர்மட்டக் குழு ஒன்று அடுத்த மாத தொடக்கத்தில் சிறிலங்காவுக்கு வரவுள்ளது.

இன்று வெளியேறும் ஜூலி சங் – பால்சோறுடன் கொண்டாடினார் கம்மன்பில

சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் இன்று  சிறிலங்காவை விட்டு வெளியேறுகின்றார். இந்த நிலையில், துணைத் தூதுவர், ஜெய்ன் ஹோவெல் (Jayne Howell)  பதில் தூதுவராகப்“ பணியாற்றுவார் என்று அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.

10 உலங்குவானுர்திகளை சிறிலங்கா விமானப்படையிடம் கையளித்தது அமெரிக்கா

அமெரிக்க கடற்படையினால்,  பத்து TH-57 (பெல் 206) உலங்குவானுர்திகள், கடந்த 7ஆம் நாள் சிறிலங்கா விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மன்னாரில் காற்றாலை மின்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் அனுர

மன்னாரில் 50 மெகாவாட் திறன்கொண்ட, காற்றாலை மின் திட்டம், சிறிலங்கா அதிபர்  அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் நேற்றுக்காலை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் முக்கிய சந்திப்புகளில் இந்திய கடற்படை துணைத் தளபதி

இந்திய கடற்படையின் துணைத் தளபதி (வெளிநாட்டு ஒத்துழைப்பு மற்றும் புலனாய்வுத்துறை) றியர் அட்மிரல் சிறிநிவாஸ் மாதுலா (Srinivas Maddula), சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

வெளிநாட்டு அரசாங்கங்கள் பொறுப்புக்கூறலுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் 

சிறிலங்காவின் உள்நாட்டுப் போருடன் தொடர்புடைய பாலியல் வன்முறை பற்றிய ஐ.நாவின் புதிய அறிக்கை, சிறிலங்காவில் அனைத்துலக சட்டமீறல் குற்றங்களுக்கு பொறுப்புக்கூறுவதற்கான போராட்டத்தின் மற்றொரு படியாகும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது

மோதல்களின் போது, பாலியல் வன்முறையில் ஈடுபட உத்தரவிட்டவர்கள், உதவி செய்தவர்கள் அல்லது அத்தகைய செயல்களைத் தடுக்க  தவறியவர்கள்  மீது வழக்குத் தொடரும் கடப்பாடு சிறிலங்கா அரசாங்கத்திற்கு உள்ளதாக அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.