அகதிகளை பலவந்தமாக திருப்பி அழைக்கமாட்டோம் – முதல்வர் விக்னேஸ்வரன்
தமிழ்நாட்டில் தங்கியுள்ள இலங்கை அகதிகளை பலவந்தமாக தாயகத்துக்கு திருப்பி அழைக்கப் போவதில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தங்கியுள்ள இலங்கை அகதிகளை பலவந்தமாக தாயகத்துக்கு திருப்பி அழைக்கப் போவதில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட தகவல் தொடர்பாக விளக்கமளிக்குமாறு, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு, நாடாளுமன்ற சபாநாயகர் சமல் ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.
ஐந்து தமிழ்நாட்டு மீனவர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்த மரணதண்டனைத் தீர்ப்புக்கு எதிராக, கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம், சிறிலங்கா உயர்நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மூன்றாவது முறையும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு எந்த தடையும் இல்லை என்று சிறிலங்காவின் உயர்நீதிமன்றம் கருத்துக் கூறியுள்ளது.
விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கிய ஐரோப்பிய நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யுமாறு, ஐரோப்பிய ஒன்றியத்திடம் ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்றினால் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஐந்து தமிழ்நாட்டு மீனவர்கள் விவகாரத்தில், சட்டரீதியான முயற்சிகளை விட, அரசியல் ரீதியான முடிவுகளை எடுப்பதற்கே, சிறிலங்காவுக்கு இந்தியா கடுமையான அழுத்தங்களைக் கொடுத்து வருவதாக தி ஹிந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ராஜீவ் காந்தியைக் கொல்வதற்கு விடுதலைப் புலிகள் அல்லாத தரப்பினரால் மூன்று முறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக, முன்னாள் மத்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரியான கே.ரகோத்தமன் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்துடன் சிறிலங்கா அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய இராணுவ போர்க் கல்லூரியைச் சேர்ந்த 20 அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.
இந்தியாவின் தலையீடு இல்லாமல் சிறிலங்காவில் எந்த மாற்றத்தையும் செய்ய முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.