மேலும்

பிரிவு: செய்திகள்

சீனாவிடம் அவசர உதவியைக் கோரியது சிறிலங்கா

பேரிடரால் சேதமடைந்த தொடருந்து பாதைகள், பாலங்களை மீளமைப்பதற்கு சீனாவிடம் இருந்து அவசர உதவியை எதிர்பார்ப்பதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

மின்சாரம், எரிபொருள் விநியோகம், போக்குவரத்து அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்

மின்சாரம், எரிபொருள் விநியோகம், துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து ஆகியவற்றை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் செய்யும் சிறப்பு அரசிதழ் அறிவிப்பை, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க வெளியிட்டுள்ளார்.

மீண்டும் காற்றழுத்தம் – பேரிடரை எதிர்கொள்ள தயார் நிலை

நாட்டில் இன்று முதல்  கனமழை பெய்யும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ள நிலையில்,  பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருப்பதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு, தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு மற்றும் பேரிடர் முகாமைத்துவ மையம் என்பன அறிவித்துள்ளன.

அவசரகாலச் சட்டம் நீடிப்பு – அரசிதழ் அறிவிப்பு வெளியானது

சிறிலங்காவில் அவசரகால நிலையை நீடிப்புச் செய்வதற்கான  சிறப்பு அரசிதழ் அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

ஜனவரி 9 வரை டக்ளஸ் தேவானந்தாவுக்கு விளக்கமறியல்

ஈபிடிபி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை எதிர்வரும் ஜனவரி 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் கட்டளையிட்டுள்ளார்.

டக்ளசை 90 நாள்கள் தடுத்து வைக்க அனுமதி கோரிய சிஐடி – நிராகரித்த அமைச்சர்

ஈபிடிபி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை  90 நாள்கள்  தடுத்து வைக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விடுத்த கோரிக்கையை பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நிராகரித்து விட்டதாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய- சிறிலங்கா கூட்டுக் குழுவே 450 மில்லியன் டொலர் நிதியை கையாளும்

பேரிடருக்குப் பிந்திய மீள்கட்டுமானப் பணிகளுக்கான இந்தியாவின் 450 மில்லியன் அமெரிக்க டொலர் உதவிப் பொதியை கையாளுவதற்காக, சிறிலங்கா மற்றும் இந்திய அதிகாரிகளைக் கொண்ட கூட்டுக்குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது.

டக்ளஸ் தேவானந்தாவை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் மேலதிக விசாரணைகளை நடத்துவதற்காக,  குற்றப் புலனாய்வுப் பிரிவினர் 72 மணி நேர தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்றுள்ளதாக சிறிலங்கா காவல்துறை  தெரிவித்துள்ளது.

டக்ளஸ் தேவானந்தா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது

ஈபிடிபியின் செயலாளர் நாயகமும்,முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலைக்கு நீதி கோரி பேரணி

படுகொலை செய்யப்பட்ட,  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் நினைவேந்தல் நிகழ்வு மற்றும் படுகொலைக்கு நீதி கோரும் பேரணி என்பன மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்றுள்ளன.