மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

நல்லிணக்க பொறிமுறைகளுக்கான ஒருங்கிணைப்புச் செயலக செயலாளராக மனோ திட்டவெல

நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான ஒருங்கிணைப்புச் செயலகத்தின் செயலாளர் நாயகமாக மனோ திட்டவெல நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா ரூபாவின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – 150 ரூபாவை எட்டுகிறது டொலர்

அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் நாணய மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் மதிப்பு நேற்று 149 ரூபாவைக் கடந்துள்ளது.

சுதந்திரக் கட்சிப் பதவி வேண்டாம் – கோத்தா நிராகரிப்பு

சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் பதவி ஒன்றை சலுகையாக வழங்கினால் அதனைத் தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.

400 மில்லியன் டொலர் செலவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை அபிவிருத்தி செய்கிறது ஜப்பான்

கட்டுநாயக்க அனைத்துலக விமான நிலையத்தின் புதிய முனையத்தை அமைப்பதற்கு, 400 மில்லியன் டொலரை கடனாக வழங்குவதற்கு  ஜப்பான் முன்வந்துள்ளது.

கோவாவில் கட்டப்படும் கப்பல்களைப் பார்வையிட்டது சிறிலங்கா பாதுகாப்பு உயர்மட்டக் குழு

சிறிலங்கா கடற்படைக்காக இந்தியாவின் கோவா கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டு ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களை சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தலைமையிலான உயர் மட்டக் குழுவினர் பார்வையிட்டுள்ளனர்.

வடக்கில் உருக்கு வீடுகள் அமைக்கும் உடன்பாட்டை இறுதி செய்ய வருகின்றனர் மிட்டலின் பிரதிநிதிகள்

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் 65 ஆயிரம் உருக்கு வீடுகளை அமைக்கும் திட்டம் தொடர்பான, உடன்பாட்டை இறுதி செய்வதற்காக, இந்திய வம்சாவளித் தொழிலதிபரான லக்ஸ்மி மிட்டலுக்குச் சொந்தமான, ஆர்சிலோர் மிட்டல் நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று வரும் 31ஆம் நாள் கொழும்பு வரவுள்ளது.

சம்பூர் அனல் மின்திட்டம் குறித்து இந்தியாவுடன் பேசுவேன் – இரா.சம்பந்தன்

சம்பூரில் 500 மெகாவாட் உற்பத்தித் திறன்கொண்ட அனல் மின் நிலையத்தை இந்தியா நிறுவுவதால், ஏற்படக் கூடிய சுற்றாடல் பாதிப்புகள் தொடர்பாக இந்தியத் தூதரகத்துடன் தாம் கலந்துரையாடவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஆறு அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்த விசாரணைக்கு சிறிலங்கா அதிபர் உத்தரவு

ஆறு அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பாக, விசாரணை நடத்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை – பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர

பெல்ஜியத்தில் அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல்களை அடுத்து, சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறிலங்கா விமானப்படை சிறப்பு பாதுகாப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் புதிய விசேட திட்டம் ஒன்றை சிறிலங்கா விமானப்படை இன்று ஆரம்பித்துள்ளது.