மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

தற்கொலைத் தாக்குதல் அங்கி 5 ஆண்டுகளுக்கு முந்தியது- விசாரணையில் கண்டுபிடிப்பு

சாவகச்சேரி மறவன்புலவு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கைப்பற்றப்பட்ட தற்கொலை தாக்குதல் அங்கி, சுமார் ஐந்து ஆண்டுகள் பழைமையானது என்று, தீவிரவாத விசாரணைப் பிரிவின் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்டார் பீரிஸ்- இன்று விசாரணைக்கு அழைப்பு

சாவகச்சேரியில் வெடிபொருள் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்குட்படுத்தப்படவுள்ளார்.

வடக்கில் படைக்குறைப்பு நடவடிக்கை பாதிக்கப்படாது – சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்

சாவகச்சேரியில் தற்கொலை தாக்குதல் அங்கி உள்ளிட்ட வெடிபொருட்கள்  கைப்பற்றப்பட்ட சம்பவத்தினால், வடக்கில் இருந்து படைகளைக் குறைக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டத்தில் பாதிப்பு ஏதும் ஏற்படாது என்று சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடன் எட்கா உடன்பாட்டை செய்யுமாறு சிறிலங்காவுக்கு மூன்று நாடுகள் அழுத்தம்

இந்தியாவுடன், சிறிலங்கா பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாட்டைச் செய்து கொள்வதையிட்டு ஜப்பான், சீனா, தென்கொரியா போன்ற நாடுகள், அக்கறை கொண்டுள்ளதாக சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

80 வீத நிதியை திறைசேரிக்குத் திருப்பி அனுப்புகிறார் விக்னேஸ்வரன் – ஹெல உறுமய குற்றச்சாட்டு

வடக்கு மாகாண முதலமைச்சர் பிரிவினைவாத, இனவாத நிகழ்ச்சி நிரலுடன் செயற்படுவதாகவும், அவரது செயற்பாடுகள், தேசிய நல்லிணக்கத்துக்கு  இடையூறாக இருப்பதாகவும், ஜாதிக ஹெல உறுமய குற்றம்சாட்டியுள்ளது.

இந்த ஆண்டில் சீனாவுடனான பாதுகாப்பு உறவுகள் மேலும் வலுவடையும் – என்கிறது சிறிலங்கா

சீனாவுடனான பாதுகாப்பு உறவுகள் இந்த ஆண்டில் மேலும் வலுப்படுத்தப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

புனர்வாழ்வு அளிக்கப்படாதவர்களால் அச்சுறுத்தல் – கோத்தா எச்சரிக்கை

சாவகச்சேரியில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வெடிபொருள் மீட்கப்பட்ட வீட்டில் இருந்து தப்பிச்சென்ற இளைஞர் கிளிநொச்சியில் கைது

சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியில், தற்கொலைத் தாக்குதல் அங்கி, கிளைமோர்கள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்ட, வீட்டில் இருந்து தப்பிச் சென்ற இளைஞர் இன்று கிளிநொச்சிப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மைத்திரியைப் படுகொலை செய்யச் சதி? – யாழ்ப்பாண பயணம் ரத்து

சாவகச்சேரியில் கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலைக் குண்டு அங்கி மற்றும் வெடிபொருள்கள், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைப் படுகொலை செய்யும் திட்டத்தின் ஒரு அங்கமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக கொழும்பு ஆங்கில ஊடகம்  ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

திடீர் மின்வெட்டினால் இருளில் சிக்கிய சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, உரையாற்றிக் கொண்டிருந்த போது, மின்வெட்டு ஏற்பட்டதால், இருளில் தனது உரையை தொடர வேண்டிய நிலைக்கு உள்ளானார். இந்தச் சம்பவம் நேற்று, வடமேல் மாகாணசபையில் இடம்பெற்றது.