மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

அமெரிக்க அதிபர் தேர்தல் – வேட்பாளர் தேர்தலில் ஹிலாரி கிளின்டன் வெற்றி

அமெரிக்காவில் வரும் நொவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்டன் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்பது உறுதியாகியுள்ளது.

10 வீதமான வெடிபொருட்களே ஆயுதக்கிடங்கில் இருந்தன – மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க

கொஸ்கம- சலாவ இராணுவ முகாமின் ஆயுதக் கிடங்கில் வெடிவிபத்து ஏற்பட்ட போது, 10 வீத வெடிபொருட்களே அங்கு இருந்ததாக, சிறிலங்கா இராணுவத்தின், மேற்குப் பிராந்திய படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.

உருக்குலைந்து தரைமட்டமாகக் கிடக்கும் சலாவ இராணுவ முகாம் – ஒளிப்படங்கள்

கொஸ்கம –  சலாவ சிறிலங்கா இராணுவ முகாம் நேற்று ஏற்பட்ட வெடிவிபத்தினால் முற்றாகவே அழிந்து போயுள்ளது. வெடிபொருள்கள் சேமிக்கப்பட்டிருந்த, கட்டங்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்து தரைமட்டமாகியுள்ளன.

இன்று அவசரமாக கூடுகிறது தேசிய பாதுகாப்புச் சபை

கொஸ்கம- சலாவ இராணுவ முகாம் ஆயுதக் கிடங்கில் நேற்றுமாலை ஏற்பட்ட பாரிய வெடிவிபத்துக் குறித்து ஆராய்வதற்காக, சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புச் சபை அவசரமாக இன்று கூடவுள்ளது.

வெடிவிபத்துக்கு நாசவேலை காரணமா? – அமைச்சர் சாகல சந்தேகம்

கொஸ்கம – சலாவ சிறிலங்கா இராணுவ முகாமில் நேற்றுமாலை ஏற்பட்ட வெடிவிபத்துக்கு, நாசவேலை காரணமாக இருக்கக் கூடும் என்று, சிறிலங்காவின் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஆயுதக் கிடங்கு வெடிப்பில் இராணுவச் சிப்பாய் பலி – பலர் காயம்

கொஸ்கம- சலாவ இராணுவ முகாமில் நேற்று மாலை ஏற்பட்ட வெடிவிபத்தில் சிறிலங்கா இராணுவச் சிப்பாய் ஒருவர், பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பற்றி எரிகிறது கொஸ்கம இராணுவ ஆயுதக்கிடங்கு – வெடிச்சத்தங்களால் அதிர்வு

கொஸ்கமவில் உள்ள சிறிலங்கா இராணுவ முகாம் ஆயுதக் கிடங்கில் இன்று மாலை 6 மணியளவில் பாரிய வெடிவிபத்து ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

விடுதலைப் புலிகள் மீதான சிறிலங்காவின் குறி – அமெரிக்கா கவலை

விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சியைத் தடுப்பதிலேயே சிறிலங்காவின் பாதுகாப்பு அமைப்புகள் கவனம் செலுத்துவதால், ஐஎஸ் தீவிரவாதம் போன்ற புதிய அச்சுறுத்தல்களில் கவனம் செலுத்துவது பாதிக்கப்படுவதாக அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது.

திருகோணமலை பெருநகர அபிவிருத்தியை திட்டமிடும் பொறுப்பு சிங்கப்பூர் நிறுவனத்திடம்

திருகோணமலையை அபிவிருத்தி செய்வது தொடர்பாக, சிங்கப்பூரின் உட்கட்டமைப்பு ஆலோசனை நிறுவனமான சேர்பனா ஜுரோங் நிறுவனத்துக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது.

மகிந்தவின் பாதுகாப்புக் குறைக்கப்படவில்லை- சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக் குறைக்கப்படவில்லை என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.