மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

50 ஆயிரம் படையினரை களமிறக்கத் தயார் – சிறிலங்கா இராணுவத் தளபதி

ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தினால் பாதிக்கப்பட்டுள்ள சலாவ பிரதேசத்தில் உள்ள 12 கிராம அதிகாரி பிரிவுகளிலும், வழமை நிலையை ஏற்படுத்த 50 ஆயிரம் இராணுவத்தினரைக் களமிறக்கத் தயார் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் கிரிசாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளருடன் சிறிலங்கா விவகாரம் குறித்து பிரித்தானிய அமைச்சர் பேச்சு

பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சர் ஹியூகோ ஸ்வயர், நேற்று ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

யாழ். துரையப்பா விளையாட்டரங்கை மோடியுடன் இணைந்து திறந்து வைக்கிறார் மைத்திரி

இந்திய அரசின் நிதியுதவியுடன், மீளப் புனரமைக்கப்பட்டுள்ள யாழ். துரையப்பா விளையாட்டரங்கை,  சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இணைந்து திறந்து வைக்கவுள்ளனர்.

சலாவ முகாமில் இருந்த ஆயுதங்கள் பாகிஸ்தானுக்கு விற்கப்படவிருந்தவையா?

சலாவ இராணுவ முகாமில் வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் பாகிஸ்தானுக்கு விற்பதற்குத் திட்டமிடப்பட்டிருந்தாக வெளியான செய்திகளை, சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன நிராகரித்துள்ளார்.

இறுதிப்போரில் இரசாயன ஆயுதங்கள் பாவிக்கப்படவில்லை – என்கிறார் ரணில்

இறுதிக்கட்டப் போரில் பொதுமக்கள் இரசாயன ஆயுதங்களால் பாதிக்கப்படவில்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வாக்குறுதிகளை சிறிலங்கா நிறைவேற்றவில்லை – ஜெனிவாவில் முறையிடவுள்ளது கூட்டமைப்பு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், அளித்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற சிறிலங்கா அரசாங்கம் தவறியுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

புலிகளின் ஈழக்கனவைத் தோற்கடிப்பேன் – சிறிலங்கா அதிபர் சூளுரை

உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இன்னமும் எஞ்சியிருக்கும் விடுதலைப் புலிகளின் ஈழக்கனவை முற்றாக அழிக்கப் போவதாக, சூளுரைத்திருக்கிறார்  சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

புதிய கட்சியை ஆரம்பிக்குமாறு மகிந்தவுக்கு அழுத்தம் – அடுத்த சில நாட்களில் இறுதி முடிவு

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவை பத்தரமுல்லையில் உள்ள அவரது செயலகத்தில் நேற்று சந்தித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாகாணசபை உறுப்பினர்களின் குழுவொன்று, புதிய கட்சியை ஆரம்பிக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

காணாமற்போனதை உறுதி செய்யும் சான்றிதழ்கள் – சிறிலங்கா அமைச்சரவை அனுமதி

சிறிலங்காவில் போர் நடந்த காலத்தில், காணாமற்போனவர்கள் தொடர்பாக, அவர்கள் காணாமற்போனதை உறுதிப்படுத்தும், சான்றிதழ்களை உறவினர்களுக்கு வழங்குவதற்கு அனுமதிக்கும் சட்டமூலத்துக்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

இராணுவ நீதிமன்ற விசாரணை – பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் முடிவு

கொஸ்கம– சலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிவிபத்து தொடர்பாக விசாரணைகளை நடத்துவதற்கு, விசாரணை நீதிமன்றம் ஒன்றை சிறிலங்கா இராணுவத் தளபதி நியமிப்பார் என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.