மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

மீண்டும் பீஜிங் செல்கிறார் சிறிலங்கா அதிபர் – சீன அதிபரிடம் இருந்து அழைப்பு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளுமாறு, சீன அதிபர் ஷி ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்க இந்த தகவலை வெளியிட்டார்.

சிங்கப்பூருக்குள் நுழைய விடாமல் திருப்பி அனுப்பப்பட்டார் மகிந்தவின் பேச்சாளர்

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் ரொகான் வெலிவிட்டவை, சிங்கப்பூர் அரசாங்கம் நாடு கடத்தியுள்ளது. 

மகிந்தவின் இராணுவப் பாதுகாப்பு இன்றுடன் முற்றாக நீக்கம்

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு, வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு இன்றுடன் முழுமையாக நீக்கப்படவுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோடி வாக்குறுதி அளித்தபோதும் இன்னமும் பேச்சுக்கள் தொடங்கவில்லை

சம்பூரில் திரவ இயற்கை எரிவாயு அனல் மின் நிலையத்தை அமைப்பது தொடர்பாக இதுவரை இந்திய- சிறிலங்கா அரசாங்கங்களுக்கு இடையில் எந்தப் பேச்சுக்களும் ஆரம்பிக்கப்படவில்லை என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

காணாமற்போனோர் குறித்த 3000 முறைப்பாடுகளை குப்பைக்குள் வீசியது பரணகம ஆணைக்குழு

காணாமற்போனோர் தொடர்பாக தமது ஆணைக்குழுவுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட 3000 முறைப்பாடுகள், ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் பதிவு செய்யப்பட்டவை என்று கண்டறியப்பட்டுள்ளதாக, ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் பங்கேற்ற நட்சத்திர விடுதி திறப்பு விழாவில் தீவிபத்து

அம்பாந்தோட்டையில் நேற்று மாலை சிறிலங்கா அதிபரால் திறந்து வைக்கப்பட்ட சங்கிரி-லா நட்சத்திர விடுதியில் நடந்த கலை நிகழ்வுகளின் போது, தீவிபத்து ஏற்பட்டது.

சம்பந்தனைச் சந்தித்தார் நோர்வே இராஜாங்கச் செயலர்

இரண்டு நாள் பயணமாக நேற்று கொழும்பு வந்த, நோர்வே வெளிவிவகார அமைச்சின் இராஜாங்கச் செயலர், ரோர் ஹட்ரெம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

100 வீடுகளுடன் சீன- சிறிலங்கா நட்புறவுக் கிராமத்தை உருவாக்குகிறது சீனா

அண்மைய இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, சிறிலங்கா- சீன நட்புறவுக் கிராமத்தில் 100 வீடுகளை அமைத்துக் கொடுக்கவுள்ளதாக சீனா அறிவித்துள்ளது.

வட,கிழக்கில் மீள்குடியேற்றம் – உயர்மட்ட அதிகாரிகளுடன் சிறிலங்கா அதிபர் அவசர கூட்டம்

வடக்கு கிழக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களை தமது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்துவது தொடர்பாக, முப்படைகளின் தளபதிகள், பாதுகாப்பு அதிகாரிகள், மற்றும் அமைச்சுக்களின் செயலர்களுடன், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று பேச்சுக்களை நடத்தினார்.

ஜூலை 15இக்குள் ஆவணங்களை ஒப்படைக்க பரணகம ஆணைக்குழுவுக்கு உத்தரவு

காணாமற்போனோர் குறித்த விசாரணைகளை மேற்கொண்டு வரும் பரணகம ஆணைக்குழுவிடம் உள்ள அனைத்து ஆவணங்களையும், காணாமற்போனோர் தொடர்பாக அமைக்கப்படவுள்ள சிறப்புப் பணியகத்திடம் வரும் ஜூலை 15ஆம் நாளுக்குள் ஒப்படைக்குமாறு சிறிலங்கா அரசாங்கம் கோரியுள்ளது.