அரசியலமைப்பு சபையில் இருந்து விலகினார் விஜேதாச ராஜபக்ச
அரசியலமைப்பு சபையில் இருந்து விலகிக் கொள்வதாக, சிறிலங்காவின் முன்னாள் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச அறிவித்துள்ளார்.
அரசியலமைப்பு சபையில் இருந்து விலகிக் கொள்வதாக, சிறிலங்காவின் முன்னாள் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச அறிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை நீக்கப்பட்ட பின்னர், ஐரோப்பிய ஒன்றியத்துக்கான சிறிலங்காவின் மீன் ஏற்றுமதி 45.9 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக, கடற்றொழில் மற்றும் கடல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு – கேப்பாப்புலவில், சிறிலங்கா இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பில் இருந்து வந்த பொதுமக்களுக்குச் சொந்தமான 133 ஏக்கர் காணிகள் இன்று விடுவிக்கப்படவுள்ளன என்று புனர்வாழ்வு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
2018-19 கல்வியாண்டில், இந்தியாவின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கு, சிறிலங்கா மாணவர்கள் 175 பேருக்கு புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளது என்று கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
2015 அதிபர் தேர்தலில் தான், தோற்கவில்லை என்றும் அனைத்துலக சக்திகளால் தோற்கடிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்றுச் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
சிறிலங்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தாவர உற்பத்திகளின் மீதான கண்காணிப்பு அதிகரிக்கப்படும் என்று ரஷ்யாவின், விவசாய மற்றும் விலக்குகள் கண்காணிப்பு அமைப்பான, Rosselkhoznadzor இன் தலைவர், சேர்ஜி டாங்க்வேர்ட் தெரிவித்துள்ளார்.
உடல்நலக் குறைவினால், கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இன்று சந்தித்து நலம் விசாரித்தார்.
உள்ளூராட்சித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு எதிர்வரும் ஜனவரி 25ஆம், 26ஆம் நாள்களில் நடைபெறும் என்று சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
விடுதலைப் புலிகள் இன்னொரு போரைத் தொடங்குவார்கள் என்பது வெறும் வதந்தியே, வடக்கில் விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சிக்கு இடமில்லை என்பதை சிறிலங்கா இராணுவம் திடமாக நம்புகிறது என்று சிறிலங்கா இராணுவத்தின் யாழ். படைகளின் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.