மேலும்

செய்தியாளர்: சிறப்புச் செய்தியாளர்

சிறிலங்கா அதிபருடன் அவுஸ்ரேலிய பிரதமர் பேச்சு – ஆட்கடத்தல் தடுப்பு குறித்து முக்கிய கவனம்

அவுஸ்ரேலியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று அவுஸ்ரேலியப் பிரதமர் மல்கம் ரேன்புல்லை சந்தித்துப் பேச்சுக்களை நடத்தினார்.

கொழும்பிலா- யாழ்ப்பாணத்திலா விசாரணை? – வித்தியா கொலை வழக்கில் இழுபறி

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை தொடர்பாக ட்ரயல் அட்பார் விசாரணையை நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இந்த விசாரணையை கொழும்பிலா யாழ்ப்பாணத்திலா நடத்துவது என்பது தொடர்பாக முடிவெடுப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளதால், இந்த விசாரணைகள் தாமதமடைந்துள்ளன.

கூட்டமைப்பின் பேரணியில் 15 அம்ச மே நாள் பிரகடனம் வெளியீடு

அம்பாறை மாவட்டம்- ஆலையடிவேம்பில் இன்று காலை இடம்பெற்ற தேசியக் கூட்டமைப்பின் மே நாள் பேரணியில் 15 அம்சங்கள் கொண்ட மே நாள் பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது.

முழு அடைப்புப் போராட்டத்தினால் முடங்கியது வடக்கு, கிழக்கு பகுதிகள்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கு நீதி வழங்கக் கோரி, வடக்கு கிழக்கு பகுதிகளில் இன்று நடத்தப்படும் முழு அடைப்புப் போராட்டத்தினால், தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும் முற்றாகச் செயலிழந்துள்ளன.

வடக்கு, கிழக்கு பகுதிகளில் இன்று முழு அடைப்புப் போராட்டம்

வடக்கு- கிழக்கு மாகாணங்கள் தழுவிய மிகப்பெரிய முழு அடைப்புப் போராட்டம் இன்று முன்னெடுக்கப்படவுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் அழைப்பின் பேரில் இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.

சோமாலிய கடற்கொள்ளையர்களால் சிறிலங்கா மாலுமிகளுடன் கடத்தப்பட்ட கப்பல் விடுவிப்பு

சோமாலிய கடற்கொள்ளையர்களால் 8 சிறிலங்கா மாலுமிகளுடன் கடத்தப்பட்ட அரிஸ் -13 என்ற  எண்ணெய் தாங்கி கப்பல் நேற்றிரவு விடுவிக்கப்பட்டுள்ளதாக மொகடிசுவில் உள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.

8 இலங்கை மாலுமிகளுடன் எண்ணெய்க் கப்பல் கடத்தப்பட்டது

சிறிலங்கா மாலுமிகளுடன் இந்தியப் பெருங்கடலில் பயணித்த எண்ணெய்க் கப்பல் ஒன்று சோமாலிய கடற்கொள்ளையர்களினால், கடத்தப்பட்டுள்ளது. இந்தக் கப்பலில் இலங்கை மாலுமிகள் எட்டுப் பேர் இருந்தனர் என்று சிறிலங்கா கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.

யாழ். குடாநாட்டு நிலவரங்களை ஆய்வு செய்த இந்திய தூதரக பாதுகாப்பு ஆலோசகர்

கொழும்பில் உள்ள இந்தியத் தூதரக பாதுகாப்பு ஆலோசகராக அண்மையில் பதவியேற்ற கப்டன் அசோக் ராவ், யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குப் பயணம் மேற்கொண்டு அங்குள்ள நிலைமைகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.

தீர்மான வரைவு குறித்து இந்தியாவுடனும் ஆலோசனை

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ள தீர்மான வரைவு குறித்து இந்தியாவுடனும் ஆலோசனைகள் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலமீட்புப் போராட்டத்துக்கு ஆதரவாக வடபகுதி மாணவர்கள்

சிறிலங்கா விமானப்படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி, பிலக்குடியிருப்பு மக்கள், கேப்பாப்பிலவு விமானப்படை முகாம் முன்பாக 21 நாட்களாக நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவாக இன்று மாணவர்கள் ஒரு மணிநேர கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்தினர்.