மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

மைத்திரிபால சிறிசேனவிடம் ‘நாடி’ பிடித்துப் பார்க்கவுள்ள அஜித் டோவல்

எதிரணியின் பொதுவேட்பாளராக, போட்டியிடவுள்ள மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க ஆகியோருடன், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் மேற்கொள்ளவுள்ள சந்திப்பின் மீது அனைவரின் கவனமும் குவிந்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

வாக்குறுதியை காப்பாற்றவில்லை கோத்தா – கத்தோலிக்கத் திருச்சபை அதிருப்தி

பாப்பரசரின் படத்தை தேர்தல் பரப்புரைக்கு சிறிலங்காவின் ஆளும்கட்சி பயன்படுத்தி வருவது குறித்து கத்தோலிக்கத் திருச்சபை கடும் அதிருப்தியடைந்துள்ளது.

சிறிலங்காவைப் புறக்கணித்தது இந்தியா – வெளிவிவகார அமைச்சு கவலை

இந்திய அரசாங்கத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இணையத்தள நுழைவிசைவு திட்டத்தில் சிறிலங்கா உள்ளடக்கப்படாதது குறித்து, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு கவலை வெளியிட்டுள்ளது.

திங்களன்று கொழும்பு செல்கிறார் அஜித் டோவல் – மைத்திரியையும் சந்திக்கிறார்

சிறிலங்கா கடற்படை ஒழுங்கு செய்துள்ள கடல் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக, நாளை மறுநாள் கொழும்புக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், எதிரணியின் பொது வேட்பாளராகப் போட்டியிடும் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

ஒப்புக்கொண்டது அவுஸ்ரேலியா

அவுஸ்ரேலியா நோக்கி 37 அகதிகளுடன் வந்த படகு ஒன்றை சிறிலங்கா அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதை அவுஸ்ரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொறிசன் ஒப்புக்கொண்டுள்ளார்.

வெளிநாடுகளில் 18 கடற்படைத் தளங்களை அமைக்கும் திட்டம் – சீனா நழுவலான பதில்

சிறிலங்கா உள்ளிட்ட 18 நாடுகளில் சீனா கடற்படைத் தளங்களை அமைக்கவுள்ளதாக வெளியான அறிக்கை குறித்து விசாரணை நடத்தியுள்ளதாக சீன பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

யாழ்.படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் ஜெகத் அல்விஸ் – “வெள்ளைவான் கடத்தல் சூத்திரதாரி”

யாழ்ப்பாண படைகளின் தலைமையக கட்டளைத் தளபதியான மேஜர் ஜெனரல் உதய பெரேரா நேற்று அவசரமாக கொழும்புத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சிறிலங்காவுக்கு எதிராக வர்த்தகத் தடை – பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் யோசனை

சிறிலங்காவுக்கு எதிராக தடைகளை விதிக்க வேண்டும் என்று, ஐரோப்பிய ஒன்றியத்திடம், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தீவிரவாதமே நாட்டுக்கு அடிப்படைச் சவால் – சார்க் மாநாட்டில் மகிந்த

தீவிரவாதம் இன்னமும் தமது  நாட்டுக்கும் பிராந்தியத்துக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் சிறுபான்மை பெண்கள் மீது திட்டமிட்ட பாலியல் வன்முறை – ஐ.நா குற்றச்சாட்டு

சிறிலங்காவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் சிறுபான்மை முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக சுமார் 500 தாக்குதல்களை பொது பல சேனா அமைப்பு நிகழ்த்தியுள்ளதாக, ஐ.நாவின் சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான சிறப்பு அறிக்கையாளர் ரிட்டா ஐசக் குற்றம்சாட்டியுள்ளார்.