மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

காங்கேசன் லங்கா சீமெந்து நிறுவனத்தை சுவீகரிக்கிறது சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு

காங்கேசன்துறையில் உள்ள லங்கா சீமெந்து நிறுவனத்தின் 104 ஏக்கர் காணியையும், தொழிற்சாலைக் கட்டடங்களையும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு சுவீகரிக்கவுள்ளது.

நேபாளம் சென்றடைந்தார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச சார்க் நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று காலை நேபாளத்தைச் சென்றடைந்தார்.

இன்று காலை நேபாளம் செல்கிறார் மகிந்த – நரேந்திர மோடியுடன் முக்கிய சந்திப்பு

நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் 18வது சார்க் மாநாடு நாளை ஆரம்பமாகவுள்ளது. இருநாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், சிறிலங்கா, இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பூட்டான், மாலைதீவு, ஆப்கானிஸ்தான், பங்களாதேஸ் ஆகிய எட்டு உறுப்பு நாடுகளினதும், தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்திய – சிறிலங்கா சிறப்புப் படைகளின் மூன்று வார கூட்டுப் பயிற்சி நிறைவு

இந்திய – சிறிலங்கா சிறப்புப் படைப்பிரிவுகள் இணைந்து நடத்திய மூன்று வாரகால கூட்டுப் போர்ப்பயிற்சி நேற்று அம்பாந்தோட்டையில் நிறைவடைந்தது.

தோல்வியுற்றால் மகிந்த மீது போர்க்குற்ற விசாரணை – அல்ஜசீரா விவாதத்தில் கருத்து

அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியைத் தழுவினால், போர்க்குற்றச்சாட்டுகளுக்காக, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் என்று உலகத் தமிழர் பேரவையின் மூலோபாய முயற்சிகளுக்கான பணிப்பாளர் சுரேன் சுரேந்திரா தெரிவித்துள்ளார்.

அதிர்ச்சியில் கத்தோலிக்கத் திருச்சபை – வாக்குறுதியை மீறும் சிறிலங்கா அரசு

பாப்பரசரின் வருகையை அண்டி தேர்தல் நடத்தப்படாது என்று கத்தோலிக்கத் திருச்சபைக்கு வழங்கிய வாக்குறுதியை மீறியுள்ள சிறிலங்கா அரசாங்கம், பாப்பரசரின் பயணத்தை அரசியல் நோக்கங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது என்ற கோரிக்கையையும் உதாசீனப்படுத்தி வருகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு?

சிறிலங்கா அதிபர் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அவசர கூட்டம் ஒன்று நாளை நடைபெறவுள்ளது.

அடுத்த வாரத்துக்குள் அமைச்சரவை மாற்றம் – கட்சி தாவல்களைத் தடுக்க அவசர நடவடிக்கை

அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதால், அடுத்தவாரம் அமைச்சரவையை மாற்றியமைக்க சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கத் தூதுவர் சிசன் ஐ.நாவுக்கான பிரதி தூதுவராகிறார் – செனட் அங்கீகாரம்

சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் ஐ.நாவுக்கான அமெரிக்காவின் பிரதி தூதுவராகப் பொறுப்பேற்கவுள்ளார்.

புலிகள் எரித்த சடலங்களை ஒட்டுசுட்டான் காட்டில் தேடுகிறது சிறிலங்கா காவல்துறை

சிறிலங்கா காவல்துறை ஆய்வாளர் ஜெயரட்ணம் உள்ளிட்ட 80 சிறிலங்கா படையினர் மற்றும் காவல்துறையினர், விடுதலைப் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு எரிக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தைக் கண்டுபிடிக்க தேடுதல் ஒன்றை சிறிலங்கா காவல்துறை ஆரம்பித்துள்ளது.