பசிலுடன் அதுரலிய ரத்தன தேரர் ஐந்து மணி நேரம் இரகசியப் பேச்சு
திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பான வழக்கில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுடன், ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்தன தேரர் நேற்று ஐந்து மணி நேரம் பேச்சு நடத்தியுள்ளார்.




