மேலும்

சற்று நேரத்தில் கொழும்பை வந்தடைகிறது ஜோன் கெரியின் விமானம்

john kerry-boardingஅமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி சிறிலங்காவுக்கான இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்டு இன்றுகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ளார். அவர் பயணம் செய்யும் சிறப்பு விமானம் நேற்று  அதிகாலையில் வொசிங்டனில் இருந்து புறப்பட்டது.

இன்னும் சற்று நேரத்தில் அந்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜோன் கெரியின் பயணத்தை முன்னிட்டு,  கட்டுநாயக்க- கொழும்பு பிரதான வீதியிலும், கொழும்பு நகர வீதிகளிலும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

john kerry-boarding

சிறிலங்கா நோக்கி விமானத்தில் புறப்படும் ஜோன் கெரி.

இன்று காலை 7.45 மணி தொடக்கம், 8.30 மணி வரை, கொழும்பு – கட்டுநாயக்க விமான நிலைய  அதிவேக நெடுஞ்சாலையிலும், களனி, பேஸ்லைன் வீதி, பொரளை சந்தி, டி.எஸ்.சேனநாயக்க சந்தி, கின்சி வீதி,  ஹோமட்டன் பிளேஸ், ஆனந்தகுமாரசுவாமி மாவத்தை, நெலும்பொக்குணவுக்கு எதிரேயுள்ள வீதி,  லிபேர்டி சுற்றுவட்டம், சென்.மைக்கல் சுற்றுவட்டம், காலி வீதி, காலிமுகத்திடல் சுற்றுவட்டம் ஆகியவற்றில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் இருக்கும்.

பிற்பகல் 12.20 தொடக்கம் 12.30 வரை, என்எஸ்ஏ சுற்றுவட்டம் தொடக்கம், காலிமுகத்திடல் சுற்றுவட்டம் வரை கொள்ளுப்பிட்டி பகுதியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும்.

பிற்பகல் 2 மணி தொடக்கம் 2.30 வரை, லிபேர்டி சுற்றுவட்டம், ஆனந்தகுமாரசுவாமி மாவத்தை, ஹோட்டன் சுற்றுவட்டம், ஹோட்டன் பிளேஸ், டி.எஸ்.சேனநாயக்க சந்தி, பேஸ்லைன் வீதி, பொரளை சந்தி, களனி பாலத்தில் இருந்து களனி விகாரை வரையும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

பின்னர், பிற்பகல் 3 மணி தொடக்கம் 3.30 மணி வரை, களனி விகாரை வீதி, களனிப்பாலம், பேஸ்லைன் வீதி, பொரளை சந்தி, டி.எஸ்.சேனநாயக்க சந்தி, கின்சி வீதி,  ஹோட்டன் பிளேஸ், ஆனந்தகுமாரசுவாமி மாவத்தை, நெலும்பொக்குணவுக்கு எதிரேயுள்ள வீதி,  லிபேர்டி சுற்றுவட்டம், காலிமுகத்திடல் சுற்றுவட்டம் வரையும் போக்குவரத்துகளில் கட்டுப்பாடு விதிக்கப்படும்.

நாளை ஞாயிற்றுக்கிழமை, காலை 10. 15 மணி தொடக்கம் 11 மணி வரை, காலிமுகத்திடல் சுற்றுவட்டம், காலி வீதி, சென். மைக்கல் வீதி, சென். மைக்கல் சுற்றுவட்டம். லிபேர்டி சுற்றுவட்டம், பித்தல சந்தி, செஞ்சிலுவை சந்தி, ஆனந்தகுமாரசுவாமி மாவத்தை, தொடக்கம் லிபேர்டி சுற்றுவட்டம் வரை, ஹோட்டன் சுற்றுவட்டம், ஹோட்டன் பிளேஸ், பேஸ்லைன் வீதி, தொடக்கம், டி.எஸ்சேனநாயக்க சந்தி வரை, பொரளை சந்தி, களனிப்பாலம் தொடக்கம், கட்டுநாயக்க விமான நிலையம் வரையான நெடுஞ்சாலை என்பன மூடப்பட்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *