வெலிக்கடைச் சிறைச்சாலை கலவரம் குறித்த விசாரணை அறிக்கை ரணிலிடம் கையளிப்பு
வெலிக்கடைச் சிறைச்சாலையில் கடந்த 2012ஆம் ஆண்டு நடந்த கலவரம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் அறிக்கை நேற்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
வெலிக்கடைச் சிறைச்சாலையில் கடந்த 2012ஆம் ஆண்டு நடந்த கலவரம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் அறிக்கை நேற்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தின் நிர்வாகத்தின் கீழேயே வடக்கில் போதைப்பொருளுக்கு மக்கள் பழக்கப்படுத்தப்பட்டனர். இதற்கு சிறிலங்கா இராணுவத்தினரே பொறுப்புக் கூற வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
20ஆவது திருத்தச்சட்டமாக கொண்டு வரப்படவுள்ள தேர்தல் முறை மாற்ற யோசனைக்கு சிறிலங்கா அமைச்சரவை நேற்றுமாலை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனையை முற்றாக ஒழிப்பதற்காக போதைப்பொருள் ஒழிப்பு செயலணி ஒன்று, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் உருவாக்கப்படவுள்ளது. சிறிலங்காவின் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை இந்த முடிவை எடுத்துள்ளது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று மாலை சிறப்பு அவசர அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். இந்தக் கூட்டம் இன்று மாலை 6 மணியளவில் நடைபெறவுள்ளது.
பாகிஸ்தானுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருப்பதாக பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ரஹீல் ஷரீப் தெரிவித்துள்ளார்.
சுமார் நான்கு பத்தாண்டுகளுக்குப் பின்னர் ரஸ்ய வெளிவிவகார அமைச்சர் சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ரஹீல் ஷரீப் தியத்தலாவவில் உள்ள சிறிலங்கா இராணுவ பயிற்சிக் கல்லூரிக்கு எட்டு குதிரைகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக் கொள்ளுமாறு வரும் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தவுள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
போரினால் ஏற்பட்ட காயங்களைக் குணப்படுத்தும் நடவடிக்கையில், போரின் இறுதிக் கட்டத்தில் என்ன நடந்தது என்ற உண்மையை கண்டறியும் செயற்பாடு முக்கியமானது என்று சிறிலங்காவுக்கான பிரித்தானியத் தூதுவர் ஜேம்ஸ் டௌரிஸ் தெரிவித்துள்ளார்.