மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

அலரி மாளிகையில் மொகான் பீரிசை கண்டதாக நினைவில்லையாம் – உதய கம்மன்பில கூறுகிறார்

தேர்தல் நாளன்று இரவு அலரி மாளிகையில் பிரதம நீதியரசர் இருந்தாரா என்பது தனக்கு நினைவில்லை என்று கூறியுள்ள முன்னாள் மேல் மாகாண அமைச்சர் உதய கம்மன்பில, ஊரடங்குச் சட்டத்தைப் பிரகடனம் செய்வது குறித்து அங்கு கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

மைத்திரி அரசின் மூன்று அதிரடி நடவடிக்கைகள்

வெளிநாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகங்களில் பணியாற்றும், வெளிவிவகாரச் சேவையைச் சாராத, அரசியல் செல்வாக்கில் நியமனம் பெற்ற தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகளை உடனடியாக நாடு திரும்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் பதவியில் இருந்து விலக மொகான் பீரிஸ் முடிவு

சிறிலங்காவின் பிரதம நீதியரசர் மொகான் பீரிஸ் பதவியில் இருந்து விலக இணக்கம் தெரிவித்துள்ளதாக சிறிலங்கா அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.

பிரதேசசபை உறுப்பினரை முழந்தாளிட வைத்த நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவாரப்பெரும கைது

அகலவத்தையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதேசசபை உறுப்பினரை தாக்கி, முழந்தாளிட வைத்த ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவாரப்பெரும இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கோத்தாவின் வசம் இருந்த 3322 துப்பாக்கிகளைக் காணவில்லை – விசாரணை ஆரம்பம்

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த ரக்ன லங்கா பாதுகாப்பு சேவை நிறுவனத்தின் ஆயுதக் களஞ்சியத்தில் இருந்து, 3322 ஆயுதங்கள் காணாமற்போயுள்ளது குறித்து சிறிலங்கா காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

ஆசனமின்றி அல்லாடிய அத்தநாயக்க – ஆளும்கட்சி வரிசையில் அமர்வதற்கு அடம்

ஆளும்கட்சி வரிசையில் ஆசனம் ஒதுக்கப்படாததால், ஐதேகவின் முன்னாள் பொதுச்செயலரும், மகிந்த ராஜபக்சவுடன் கடைசி நேரத்தில் இணைந்து கொண்டவருமான திஸ்ஸ அத்தநாயக்க நேற்று நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் வெளியேறினார்.

தமிழர் பிரச்சினையை அவசரமாகத் தீர்க்க முன்வர வேண்டும் – இரா. சம்பந்தன் கோரிக்கை

தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினையை அவசர விடயமாகக் கருதி தீர்வு காண முன்வர வேண்டும் என்று சிறிலங்கா நாடாளுமன்றில் நேற்று கோரிக்கை விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

13வது திருத்தத்தின் அடிப்படையிலேயே அரசியல் தீர்வு – நாடாளுமன்றத்தில் ரணில்

புதிய அரசாங்கம் 13வது திருத்தச் சட்டத்தை அடிப்படையாக கொண்ட அரசியல் தீர்வு ஒன்றை நடைமுறைப்படுத்தும் என்று சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மீறல்கள் குறித்து வெளியார் எவரும் விசாரிக்க முடியாது – என்கிறார் ரணில்

ரோம் பிரகடனத்தில் சிறிலங்கா கையெழுத்திடாததால், நாட்டில்இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து வெளியார் தலையீடு செய்து விசாரணை செய்ய முடியாது என்று சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் இராணுவ அதிகாரியிடம் சிவில் பாதுகாப்புத் திணைக்களம்

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக, சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜனக ரத்நாயக்க, நியமிக்கப்பட்டுள்ளார்.