மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்- என்கிறார் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

போர்க்குற்றங்களில், மகிந்த ராஜபக்சவோ  கோத்தாபய ராஜபக்சவோ அல்லது உயர் இராணுவ அதிகாரிகளோ ஈடுபட்டிருந்தால் நிச்சயம் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.

ஐ.நா அறிக்கை வெளியான பின்னரே ஜெனிவா செல்வது பற்றி முடிவு – சுமந்திரன்

ஜெனிவாவில் அடுத்தவாரம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளுக்குப் பிரதிநிதிகள் குழுவை அனுப்புவதா என்பது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் தீர்மானிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்.

பிரதி, இராஜாங்க அமைச்சர்கள் நியமனத்தில் இழுபறி – பதவியேற்பு நிகழ்வு மீண்டும் ஒத்திவைப்பு

புதிய கூட்டு அரசாங்கத்தின் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வு மீண்டும் பிற்போடப்பட்டுள்ளது. நாளையே 5 அமைச்சர்கள், 45 பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு நடைபெறவுள்ளதாக சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

வடகிழக்கு கரையோரக் காடுகளில் வெளிநாட்டுப் படையினருடன் சிறிலங்கா படைகள் போர்ப் பயிற்சி

வடக்கு- கிழக்கு பகுதியில் சிறிலங்கா படையினர் நடத்தும், நீர்க்காகம்- 2015 போர்ப் பயிற்சியில், 53 வெளிநாட்டுப் படையினரும் பங்கேற்பதாக, சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.

பிரகீத் கடத்தல்- மேலும் மூன்று சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் கைது

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட சம்படிவம் தொடர்பாக மேலும் மூன்று சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதனன்று சிறிலங்காவின் புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம்

சிறிலங்காவின் புதிய கூட்டு அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் வரும் செப்ரெம்பர் 9ஆம் நாள்- புதன்கிழமை இடம்பெறவுள்ளது.

மேலும் 5 அமைச்சர்கள், 45 பிரதி, இராஜாங்க அமைச்சர்கள் செவ்வாயன்று பதவியேற்பு

சிறிலங்காவின் தேசிய அரசாங்கத்தில் மேலும் 5 அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இவர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களுடன் இணைந்து வரும் செவ்வாய்க்கிழமை பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெனிவா தொடர்பாக பொது நிலைப்பாடு – உடன்பாட்டில் கையெழுத்திடவும் ஐதேக, சுதந்திரக் கட்சி முடிவு

ஐ.நா மனித உரிமைகள் பேரவை விவகாரங்கள் தொடர்பாக, தேசிய அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள ஐதேகவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் பொதுவான இணக்கப்பாடு ஒன்றை எட்டவுள்ளதுடன் இதுபற்றிய புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றையும் செய்து கொள்ளவுள்ளன.

தென்னாபிரிக்க அதிபர் ஜேக்கப் சூமாவுடன் ரணில் சந்திப்பு

தென்னாபிரிக்க அதிபர் ஜேக்கப் சூமாவுடன், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பேச்சுக்களை நடத்தியிருக்கிறார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்தப் பேச்சுக்கள் இடம்பெற்றன.

தேசிய அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு விரைவான தீர்வைத் தரவேண்டும் – சுமந்திரன்

தேசிய அரசாங்கத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு பெற்றுத்தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.