மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

மட்டக்களப்புக்கு இரண்டரை அடி நீளமான வாக்குச்சீட்டு

வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக மட்டக்களப்பு மாவட்டத்துக்கு சுமார் இரண்டரை அடி நீளமான (30 அங்கும்) வாக்குச்சீட்டு அச்சிடப்படுவதாக சிறிலங்கா அரசாங்க பதில் அச்சகர் ஏ.ஜி.பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பௌசி தான் சிறிலங்காவின் அடுத்த பிரதமரா?

அடுத்த பிரதமர் பதவியை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தனக்குத் தந்தால் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளத் தயார் என்று தெரிவித்துள்ளார் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி.

கே.பி. மீதான நடவடிக்கை குறித்து பரிந்துரைக்க அதிபர் ஆணைக்குழு

விடுதலைப் புலிகளின் சர்ச்சைக்குரிய முன்னாள் ஆயுதக் கொள்வனவாளர் கே.பி.எனப்படும் குமரன் பத்மநாதன் குறித்த பரிந்துரைகளை மேற்கொள்வதற்கு அதிபர் ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் பிரதி நீதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

மைத்திரிக்குப் பதிலடி கொடுக்க மறந்துபோன மகிந்த

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, நேற்று அனுராதபுரவில் மைத்திரிபால சிறிசேனவுக்கு பதிலளிப்பதாக கூறியிருந்த போதிலும், நேற்றைய பரப்புரைக் கூட்டத்தில் அனுபற்றி வாய்திறக்கவில்லை.

மகிந்தவைப் பிரதமராக்கும் கோசத்துடன் அனுராதபுரவில் தொடங்கியது பரப்புரை

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது தேர்தல் பரப்புரைக் கூட்டம் இன்று மாலை சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தலைமையில் அனுராதபுரவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர்.

150 பிக்குகள் போட்டியிடுவதால் தேர்தல் திணைக்களத்துக்கு நெருக்கடி

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 150இற்கும் அதிகமான பௌத்த பிக்குகளும் போட்டியில் இறங்கியுள்ளதால், வாக்களிப்பு நிலையங்களை அமைப்பதில் தேர்தல்கள் திணைக்களத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அனுராதபுரவில் இன்று பரப்புரையை ஆரம்பிக்கிறார் மகிந்த – மைத்திரிக்கு பதிலடி கொடுப்பார்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பரப்புரை இன்று அனுராதபுரவில் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.

மைத்திரியின் உரைக்குத் தடைவிதித்தார் மகிந்த

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்த செவ்வாய்க்கிழமை மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக வெளியிட்ட கருத்தை, இலத்திரனியல் ஊடகங்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்புவதற்கு தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தடைவிதித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் செயலகத்தில் இருந்த மைத்திரியின் படம் அகற்றப்பட்டது

கொழும்பு 7இல் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் மாட்டப்பட்டிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் படம் திடீரென அகற்றப்பட்டுள்ளது.

மூன்று பிரதி அமைச்சர்கள் பதவி விலகினர் – மைத்திரி கருத்துக்கு எதிர் நடவடிக்கையாம்

சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த மூன்று பிரதி அமைச்சர்கள் இன்று தமது பதவிகளை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளனர். பிரதிஅமைச்சர்களான சுதர்சினி பெர்னான்டோ புள்ளே, லசந்த அழகியவன்ன, எரிக் வீரவர்த்தன ஆகிய மூவருமே இன்று பதவி விலகியுள்ளனர்.