மேலும்

மண்டைதீவு துடுப்பாட்ட மைதான கட்டுமானப் பணி நிறுத்தப்படாது

யாழ்ப்பாணம் அனைத்துலக துடுப்பாட்ட மைதானத்தின் கட்டுமானத்தை நிறுத்துவதற்கு அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும், கட்டுமானப் பணிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அமைச்சரவைப் பேச்சாளர்  நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடக மாநாட்டில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“யாழ்ப்பாண அனைத்துலக துடுப்பாட்ட மைதானத்தின் கட்டுமானப் பணிகளை நாங்கள் தொடர்வோம்.

எந்தவொரு கட்டுமானப் பணியையும் தொடங்கும்போது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை மற்றும் சாத்தியக்கூறு அறிக்கைகள் போன்ற சில கட்டாய அறிக்கைகள் பெறப்பட வேண்டும்.

அதைத் தவிர, திட்டத்தை நிறுத்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

தொடர்புடைய அனைத்து அமைச்சுக்களின் ஒருங்கிணைப்பு மற்றும் ஆதரவுடன் நாங்கள் திட்டத்தை மேற்கொள்வோம்.

சுற்றுச்சூழல் பிரச்சினையில் நாங்கள் கவனம் செலுத்துவோம். சம்பந்தப்பட்ட அமைச்சு மற்றும் நிறுவனங்கள் அது குறித்து நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *