மேலும்

தமிழ் அரசியல் தலைவர்களுடனான சந்திப்பு – வாய் திறந்தார் பிரித்தானிய தூதுவர்

தமிழ் அரசியல் தலைவர்களுடனான பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமியின் சந்திப்பு தொடர்பாக, சிறிலங்காவுக்கான பிரித்தானிய தூதுவர் அன்ட்ரூ பட்றிக், எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்தச் சந்திப்பில் பங்கேற்றதை உறுதிப்படுத்தியுள்ள அவர், நல்லிணக்கம், நிலைமாறுகால நீதி மற்றும் நீதி ஆகியவற்றை ஆதரிக்கும் நிலைப்பாட்டிலும், நீதி மற்றும்  சமத்துவம் குறித்த அவர்களின் முன்னுரிமைகளைக் கேட்பதிலும் பிரித்தானியா தொடர்ந்து உறுதியாக உள்ளது என்றும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றுப் பிற்பகல்  இந்தச் சந்திப்பு கொழும்பில் உள்ள பிரித்தானியத் தூதுவரின் இல்லத்தில் இடம்பெற்றது.

எனினும் மேலதிக விபரங்கள் எதையும் அவர் வெளியிடவில்லை.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *