மேலும்

சிறிலங்காவுக்கான ஐ.நாவின் நிதி சேகரிப்பு முயற்சிக்கு ஆதரவு குறைவு

சிறிலங்காவில் டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, ஐ.நாவினால் ஆரம்பிக்கப்பட்ட நிவாரண நிதி சேகரிப்பு முயற்சிக்கு எதிர்பார்க்கப்பட்டவுக்கு நிதி கிடைக்கவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கில்,  2025  டிசெம்பரில், ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான முன்னுரிமைகள் திட்டம் நிதிசேகரிப்பை அறிவித்திருந்தது.

இந்த நிவாரண நிதிக்கு, இதுவரை 22.4 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைத்துள்ளதாக  கொழும்பில் உள்ள ஐ.நா பணியகம் தெரிவித்துள்ளது.

2025 டிசம்பர் முதல் 2026 ஏப்ரல் வரை பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்க, அரசாங்க ஆதரவுடன் மேற்கொள்ளப்படும் திட்டத்திற்கு,  35.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக ஐ.நா அறிவித்திருந்தது.

அவுஸ்ரேலியா, கனடா, ஜெர்மனி, ஜப்பான், நியூசிலாந்து, அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகளிலிருந்து ஐ.நாவின் இந்த நிவாரணத் திட்டத்திற்கு பங்களிப்புகள் வந்துள்ளன.

எனினும், எதிர்பார்க்கப்பட்டவுக்கு நிதி சேரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *