மேலும்

அமெரிக்க தடைக்கு மத்தியில் ஈரான் – சிறிலங்கா வெளியுறவு அமைச்சர்கள் பேச்சு

மேற்காசியாவில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரானிய வெளியுறவு அமைச்சருடன் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பேச்சு நடத்தியுள்ளார்.

இந்தவார தொடக்கத்தில் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சியுடன் தொலைபேசியில் பேசியதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மேலும் வரிகளை விதிக்கும் என்ற அச்சத்தில் ஈரானுக்கான ஏற்றுமதியை சிறிலங்கா நிறுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளுக்கு மத்தியில் இந்த தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளது.

அனைத்துலக தடைகளுக்கு முன்னர், வாங்கிய மசகு எண்ணெய்க்காக சிறிலங்கா இன்னும் ஈரானுக்கு 250 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை திருப்பிச் செலுத்தி வருவதாக விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

தேயிலைக்கு எண்ணெய் என்ற பண்டமாற்று உடன்பாட்டின் மூலம் இந்தக் கடன் திருப்பிச் செலுத்தப்படுகிறது.

இதற்காக, 2023 ஓகஸ்ட் மாதம் தொடக்கம்,  சிறிலங்கா ஒவ்வொரு மாதமும் 5 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள தேயிலையை ஈரானுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.

சிறிலங்கா தேயிலைச் சபைக்கு சிறிலங்கா பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இதற்கான பணத்தை செலுத்துகிறது.

இந்த உடன்பாட்டை சிறிலங்கா தொடர்ந்து மதிக்கும் என்று விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஈரானின் தற்போதைய நிலைமை குறித்தும் பேசப்பட்டதாகவும், ஈரானிய பொருளாதாரம் மீண்டு வருவதாக அரக்ச்சி தன்னிடம் கூறியதாகவும்,  அமைச்சர் விஜித ஹேரத்  குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான இருதரப்பு உறவு தொடர வேண்டும், மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என ஈரானிய வெளியுறவு அமைச்சரிடம் தான் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *