அவசரகாலச் சட்ட நீடிப்பிற்கு கஜேந்திரகுமார், செல்வம் மட்டும் எதிர்ப்பு
அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கும் பிரேரணை, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று 104 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பேரிடரை அடுத்து நொவம்பர் 28ஆம் நாள் சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவினால் அவசரகாலச் சட்டம் பிரகடனம் செய்யப்பட்டது.
அதையடுத்து அரசாங்கம் நாடாளுமன்ற அனுமதியுடன் அவசரகாலச் சட்டத்தை மாதம் தோறும் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் அவசரகாலச் சட்ட நீடிப்பு பிரேரணை மீது நேற்று நடத்தப்பட்ட விவாதத்தை அடுத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதன்போது, 106 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவசரகாலச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் மட்டும் எதிராக வாக்களித்தனர்.
வாக்கெடுப்பின் போது மொத்தம் 116 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் இருக்கவில்லை.
