மேலும்

இம்மாத நடுப்பகுதியில் இந்தியா செல்கிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க இம்மாத நடுப்பகுதியில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

செயற்கை நுண்ணறிவு தாக்க தாக்க உச்சி மாநாடு 2026 இல்  பங்கேற்பதற்காக சிறிலங்கா அதிபர் புதுடெல்லிக்குச் செல்லவுள்ளார்.

இந்தியாவில் உள்ள சிறிலங்கா தூதுவர்  மகிஷினி கொலன்னே இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

செயற்கை நுண்ணறிவு தாக்க தாக்க உச்சி மாநாடு எதிர்வரும் 19ஆம் 20ஆம் திகதிகளில் புதுடெல்லியில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில், முன்னணி நிபுணர்கள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் பங்கேற்கின்றனர்.

செயற்கை நுண்ணறிவில் முன்னேற்றங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் அதன் தாக்கம் குறித்து இந்த மாநாட்டில் ஆராயப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *