மேலும்

திருத்தங்களை முன்மொழிய சிறிலங்காவுக்கு 24 மணி நேர காலஅவகாசம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மரண சான்றிதழ்களை ஏற்கத் தயங்குவதாக காணாமல் போனோருக்கான பணியகம் ஜெனிவாவில் ஒப்புக் கொண்டுள்ளது.

ஜெனிவாவில் நேற்று இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐ.நா குழுவின்  29ஆவது அமர்வில் சிறிலங்கா தொடர்பான விவாதம் இடம்பெற்ற போது காணாமல் போனோருக்கான பணியகத்தின் சார்பில் கலந்து கொண்ட ஜெகநாதன் தற்பரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மரண சான்றிதழை வழங்குவதோ அல்லது பரிந்துரைப்பதோ தமது பணியகத்தின் ஆணையல்ல என்றும் அவர் வலியுறுத்திக் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இந்த அமர்வில் உரையாற்றிய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஐ.நா. குழுவின் தலைவர் ஒலிவர் டி புரோவில் (Olivier de Frouville) ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பான, தரநிலைகளை மதிக்கும் ஒட்டுமொத்த மதிப்பீடு பற்றி தனக்கு சிறிலங்காவிடம் இருந்து சரியான பதில்கள் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஐநா குழுவின் சிறிலங்கா தொடர்பான மீளாய்வு கூட்டம் நிறைவடைந்த நிலையில்,  அதன் பரிந்துரைகள் சிறிலங்கா அரசுடன் பகிர்ந்து கொள்ளப்படும் என்றும்,  24 மணி நேரத்திற்குள் ஏதேனும் நியாயமான திருத்தங்களை செய்ய அனுமதிப்பதாகவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐ.நா குழுவின் தலைவர் ஜூவான் பப்லோ அல்பான் அலென்காஸ்ட்ரோ (Juan Pablo Albán Alencastro)  தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *