ஐ.நா பொதுச்செயலரைச் சந்தித்தார் சிறிலங்கா அதிபர்
ஐ.நா பொதுச்செயலர் அன்டனியோ குடெரெஸ்சை, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க நியூயோர்க் சென்றுள்ள சிறிலங்கா அதிபர் நேற்று பிற்பகல் ஐ.நா. தலைமையகத்தில், ஐ.நா பொதுச்செயலரைச் சந்தித்து கலந்துரையாடினார்.
“பொருளாதார, சமூக மற்றும் அரசியல் பரப்பை மேம்படுத்துவதற்கான சிறிலங்கா அரசாங்கத்தின் முன்முயற்சிகள் குறித்து நாங்கள் ஒரு பயனுள்ள கலந்துரையாடலில் ஈடுபட்டோம்.
அவரது விரிவான மதிப்பீடு மற்றும் அசைக்க முடியாத ஆதரவை மதிக்கிறோம்.“ என சிறிலங்கா அதிபரின் எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.