பாகிஸ்தான், அவுஸ்ரேலிய பிரதமர்களுடன் அனுர சந்திப்பு
பாகிஸ்தானும் சிறிலங்காவும், எதிர்வரும் ஆண்டுகளில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு தொடர்ந்து நெருக்கமாக பணியாற்றவுள்ளன.
புதன்கிழமை நியூயோர்க்கில் நடைபெற்ற ஐ.நா. பொதுச் சபையின் 80வது அமர்வின் போது, பாகிஸ்தான் பிரதமர் முகமட் ஷெபாஸ் ஷெரீஃப் மற்றும் சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின் போது, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
உயர் மட்ட பரிமாற்றங்கள், இருதரப்பு வர்த்தகம், கல்வி ஒத்துழைப்பு, கலாச்சார பரிமாற்றங்கள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கி இடம்பெற்ற இந்த பேச்சுக்களின் போது, பல்வேறு பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அதேவேளை, நேற்று மதியம் நியூயோர்க்கில் அவுஸ்ரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீசியையும், போர்ச்சுக்கல் அதிபர் றிபீலோ டி சோசாவையும் சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.