போரைத் தாமதிக்க முயன்ற ராஜபக்சவினர் – பொன்சேகா குற்றச்சாட்டு
2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்டப் போரைத் தாமதப்படுத்த முன்னாள் அதிபர்களான மகிந்த ராஜபக்சவும், கோட்டாபய ராஜபக்சவும், முயற்சித்ததாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றம்சாட்டியுள்ளார்.
2009 ஜனவரியில், சிறிலங்காஇராணுவம் வெற்றி பெறுவதற்கு 10 கிலோமீற்றர் தொலைவில் இருந்தபோது, கோட்டாபய ராஜபக்ச, வன்னிப் படைகளின் கட்டளைப் பீடத்தை ஜெனரல் ஜகத் ஜயசூரியவிடம் ஒப்படைக்க பரிந்துரைத்தார்.
இது விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படுவதை பிற்போடும் முயற்சியாகும்.
சிறிலங்கா இராணுவத்தின் எதிர்ப்பை மீறி மகிந்த ராஜபக்ச 48 மணி நேர போர்நிறுத்தத்தை அமுல்படுத்தினார்.
இது விடுதலைப் புலிகள் மீண்டும் அணி திரளுவதற்கு அனுமதித்ததுடன், அவர்கள் பாரிய தாக்குதலை நடத்தி, சுமார் 500 சிறிலங்கா படையினர் உயிரிழப்பதற்கும் வழிவகுத்தது.
2010 தேர்தலுக்கு முன்னர், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைக் கொன்றால், தமிழ் வாக்காளர்களை அந்நியப்படுத்தும் என்ற அச்சம் உள்ளிட்ட அரசியல் நோக்கங்களால் ராஜபக்சவினர், இயக்கப்பட்டனர்.
2005 ஆம் ஆண்டு அதிபர்தேர்தலுக்கு முன்னர், வடக்கின் வாக்காளர்களை தடுப்பதற்காக, மகிந்த ராஜபக்ச விடுதலைப் புலிகளுக்கு, 2 மில்லியன் டொலர்களைக் கொடுத்திருந்தார்.
இந்த நடவடிக்கைகள் நாட்டின் வெற்றியை விட, அரசியல் ஆதாயத்திற்கு அவர்கள் முன்னுரிமை அளிப்பதையே காட்டுகின்றன என்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.