இத்தாலியின் வெளிவிவகார பிரதி அமைச்சர் சிறிலங்கா வருகிறார்
இத்தாலியின் வெளிவிவகார மற்றும் அனைத்துலக ஒத்துழைப்பு பிரதி அமைச்சர் மரியா திரிபோடி (Maria Tripodi) இன்று சிறிலங்காவிற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
மூன்று நாள்கள் பயணமாக கொழும்பு வரும் அவர், சிறிலங்கா வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவுடன் இரு தரப்பு அரசியல் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.
இரண்டு நாடுகளுக்கு இடையிலும் முறைப்படியான கலந்துரையாடல் பொறிமுறையை ஏற்படுத்தும் வகையில் புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றிலும் இத்தாலியின் பிரதி வெளிவிவகார அமைச்சர் கையெழுத்திடவுள்ளார்.
அவர் பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
கிட்டத்தட்ட பத்தாண்டுகாலத்திற்குப் பின்னர், இத்தாலியின் உயர் மட்ட பிரதிநிதி ஒருவர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.